புதன், மே 24, 2006

ஆதலினால் காதல் செய்வீர் !




பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள் ?



கொஞ்ச நேரம்
சும்மா இருக்க
சொல்கிறாய்
கொஞ்சும் நேரம்
கொஞ்சநேரமாய்
எப்படி
இருக்கும் ?




யாராவது
வந்துவிடப்போகிறார்கள்
என்றபடியே
நெருங்குகின்றன
நம்
இதழ்கள்!



ஒவ்வொரு முறையும்
சீக்கிரம் போகவேண்டும்
என்கிறாய்
நமது சீக்கிரம்
அவ்வளவு சீக்கிரமாய்
வருவதில்லை !




ஏன் என்னை இப்படி
படுத்தரே ? கோபத்துடன்
கேட்கிறாய்
இருந்தும் எனக்காக
ஈரமாகின்றன
உன் உதடுகள் !




சுரிதாரிலே
நல்லா இருக்கேனா ?
இல்லை சேலையிலே
நல்லா இருக்கேனா ?

ரெண்டுலயுமே நல்லாதான்
இருப்படா நீ
ஆனா ரெண்டுமே
இல்லாமலும்
நல்லா இருப்ப !

சொன்ன பதிலுக்காக
நீ கிள்ளிய இடத்தில்
காதல் கட்டிக்கொண்டதடி !



போதும் என
எப்போதாவது
சொல்லி இருக்கிறாயா?
சிணுங்களுடன்
குனிகிறாய்
என் முகம் நோக்கி !!




நான் விட்டு விட்டு
சென்று விட்டால் என்ன
செய்வாய்?
ம்ம் கொலை செய்து
விடுவேன்
உன் காதலை !!
நீதான் என் காதல்
அப்படியென்றால்..?