செவ்வாய், மே 06, 2008

உனக்காக மட்டும்....


உன்னிடம் எனக்கு
மிகவும் பிடித்ததை
நான் சொன்னபோது
உன் முகம்போன
போக்கையும்
கை போன
போக்கையும் காண
கண்கோடி வேண்டுமடி...




நான் பார்க்கும்போது
வெளிப்படும்
வெட்கங்களையும்
மற்றவைகளையும்
நீ மறைக்கபடும் பாடு
இருக்கிறதே
உன் வெட்கங்களைவிட
அவை மிக
அழகாக இருக்கின்றன...






முத்தம் கொடுக்க
வெட்கமாக இருக்கிறதென
சாக்கு சொல்லித்திரிகிறாயே
நான் வேண்டுமானால்
கண்ணை மூடிக்கொள்கிறேன்
அப்பொழுதாவது
கொடுத்துத்தொலையேன்...


ஏதோ நீ கேட்டதால்
தானே சொன்னேன்
அதற்காக இனி
என் முன்னே நடக்கவே
மாட்டேன் என
ஏணடி அடம்பிடிக்கிறாய்..?


அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்



ஏதோ வழிதெரியாமல்
தெரியாத்தனமாக
உன் இதழருகில்
வந்துவிட்டது போல
எப்படி நடிக்கின்றன பார்
என் இதழ்கள் ?!
உன் இதழ்களால்
அவைகளை நன்றாக
புரட்டி எடு..
வருவியா வருவியா என...



ஒன்றேயொன்று
கொடுக்கவே
யோசித்தவள்
நீதானா என
திக்குமுக்காடிப்
போனேன் உன்
உதடுகளின்
வேகம் கண்டு...


போடா ..
நீ அருகில்
வர வர
நான் விலகிபோகலாம்
என்றால்
என் வெட்கங்கள்தான்
விலகிப்போய்கொண்டே
இருக்கிறன...



கேட்டபோதெல்லாம்
கொடுக்காமல்
கேட்காதபோது
இப்படியா என்
முகம் நனைய முத்தி
எடுப்பது..?
இதற்கெல்லாம்
மசிய மாட்டேன்...
உன் முத்தங்கள்
முழுதும் என்னை
நனைக்கும் வரை...


முதன்முதலில்
சேலையில் வந்து
எப்படி
இருக்கு இந்த சேலை
எனக் கேட்கிறாய்
சேலையெல்லாம்
நன்றாகத்தான்
கட்டி இருக்கிறாய்
என்னை
எப்பொழுது
இப்படி
கட்டிக்கொள்வாய்
உன் முழுதும்...?