செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008

கொஞ்சவோ... மிஞ்சவோ...




நீ ஆரம்பித்தால்


என்ன


நான் ஆரம்பித்தால்


என்ன‌


சண்டையின் முடிவை


எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?


கொஞ்சல்களிலா..


இல்லை மிஞ்சல்களிலா..







நீ

கோபமாயிருக்கையில்

உன்னைக் கொஞ்சும் போது

அதை ரசிக்காத மாதிரி

நீ நடித்துக்கொண்டிருக்கும் போது

இன்னும் கொஞ்சம் அழகாக

இருக்கடி செல்லம்...




என்னதான் சொல்லு...

உன்னிடம் சண்டையிடும்

சுகமே தனிதான்....

'காச்' 'மூச்' சென்று

சண்டையிடும் உன்

அழகான குரலுக்காகவேணும்

உன்னிடம் குட்டி குட்டியாய்

சண்டையிட வேண்டும் நான்....



என்னை எப்படியெல்லாம்

திட்டினாய்

இனி ஜென்மத்துக்கும்

உன்னிடம் பேச மாட்டேன்

என கோபமாகச் சொன்னால் எப்படி..?

சரி உன் இஷ்டம் ...

அப்போ நான் என்ன செய்தாலும்

சிணுங்கக் கூட கூடாது

சரியாடி..?




நினைத்து நினைத்து

ஒவ்வொன்றாகச்சொல்லி

சலிக்காமல்

எப்படி உன்னால் மட்டும்

சண்டையிட முடிகிறது....?

இவ்வளவு நினைவுகளையும்

சுமந்து நிற்கும்

உன் மனதுக்கு

பல‌முத்தங்களைப்

பரிசாக‌த் தருகிறேன்

என்றாலும் முறைக்கிறாய்

என்னடி செய்ய நான்..?



உன்னிடம் நான்

எதற்கெடுத்தாலும்

சண்டையிடுவதாய்

என்னிடம் கோபமாகச்

சொல்கிறாய்

எதையோ அல்ல...

உன்னை எடுக்கத்தான்..

என உன் மரமண்டைக்கு

தெரியவில்லையாடி...??




சும்மா இருந்தால்


மறந்து விடுவேன் என


நினைத்துதானே


என்னிடம் சண்டை போட்டு


ஒவ்வொருநொடியும்


உன்னைநினைக்க வைக்கிறாய்...?


சரியான நினைவு திருடிடி நீ...




போதும் இனி

என்னுடன்பேசாதே

எனக் கோபமாகச்சொல்கிறாய்...

சரி என் வாயை மட்டும்

இனி உன்னிடம்பேசாமல்

இருக்கச்சொல்கிறேன்

போதுமா...?



வார்த்தைகளால்

உன்னைக்காயப்படுத்துகிறேன்

என ஏண்டி அபாண்டமாக‌

பழிசொல்கிறாய்...??

நீ காயப்பட்டால்

வலிக்கப் போவது

எனக்குத்தான்

எனத் தெரியாதா உனக்கு..?



எவ்வளவுதான் மறைத்தாலும்

மறைக்கமுடியாத‌

உன் அழகுபோல‌

என்னதான்கோபமாக

இருந்தாலும்

அவ்வப்போது

என்னைப்பார்க்கும்

உன் கண்களின்

காதலை மறைக்கப்

படும்பாடு ரொம்ப

அழகாக‌ இருக்குடி

செல்லக்குட்டி..



நீ இவ்வளவு

ரோஷக்காரியாடி..??

ம்ம்ம்ம்...

கொஞ்சம் எனக்கும்

உன் ரோஷத்தைக்

கடன் கொடேன்...

உன் குரல் கேட்டாலே

எங்கோ

அதுதொலைந்து

போகிறது...



ஏதோ சண்டையை

ஆரம்பித்து

வைத்துவிட்டேன்

உன்னை

சமாதானப்படுத்துவதற்குள்

எத்தனை முத்தங்கள்

செலவாகப்

போகின்றனவோ..??!!!



என்னதான் உன் மீது

கோபம் வந்தாலும்

எல்லாவற்றையும்

வற்ற வைக்கும் உன்

ஒரு துளி கண்ணீரை

என்ன‌செய்வது நான்....??


77 கருத்துகள்:

Divya சொன்னது…

ஊடலில் பிறந்த 'காதல்'கவிதை அருமை;))

Divya சொன்னது…

\\'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....\\

சண்டையிடும் 'குரலை' ரசிப்பதும் ஓர் அழகுதான்....காதலில்:))

Divya சொன்னது…

\\உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??\\

மரமண்டையா??

ஹும்....'எதற்கெடுத்தாலும்' என்ற வார்த்தையை.......உன்னை எடுக்கத்தான் என்று அர்த்ததுடன் எழுதியிருப்பது அருமை:))

Divya சொன்னது…

\\வார்த்தைகளால்
உன்னைக்காயப்படுத்துகிறேன்
என ஏண்டி அபாண்டமாக‌
பழிசொல்கிறாய்...??
நீ காயப்பட்டால்
வலிக்கப் போவது
எனக்குத்தான்
எனத் தெரியாதா உனக்கு..?\\

அற்புதமான வரிகள்:))

மனதை தொட்டன!!

பெயரில்லா சொன்னது…

வாவ் எல்லாமே சூப்பர் நவீன். கொஞ்சலினால் மிஞ்சுவதுகூட அழகுதான் போல :-) வாழ்த்துகள்!

Divya சொன்னது…

\\ஏதோ சண்டையை
ஆரம்பித்து
வைத்துவிட்டேன்
உன்னை
சமாதானப்படுத்துவதற்குள்
எத்தனை முத்தங்கள்
செலவாகப்
போகின்றனவோ..??!!!\\


செலவு செய்தால்தான் 'வரவு'ம் கிடைக்கும் கவிஞரே!!!

Divya சொன்னது…

\\என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??\\


நெஞ்சை தொடும் வார்த்தைகள்:(

Divya சொன்னது…

கவிதை முழுவதுமாய் 'வழக்கம்போல்' அசத்தல்!!

வாழ்த்துக்கள் நவீன்!

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??
//

உண்மைகளை வரிகளுக்குள் அடக்கியிருக்கிறீர்கள். ரசனையுடன் ரசித்தேன்.

Unknown சொன்னது…

Me the first??

Unknown சொன்னது…

நீ ஆரம்பித்தால்
என்ன
நான் ஆரம்பித்தால்
என்ன‌
சண்டையின் முடிவை
எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?
கொஞ்சல்களிலா..
இல்லை மிஞ்சல்களிலா..//

அச்சச்சோ ஒரே கொஞ்சல்ஸ்..!! ;))

Unknown சொன்னது…

//நீ
கோபமாயிருக்கையில்
உன்னைக் கொஞ்சும் போது
அதை ரசிக்காத மாதிரி
நீ நடித்துக்கொண்டிருக்கும் போது
இன்னும் கொஞ்சம் அழகாக
இருக்கடி செல்லம்//

அப்படியா அண்ணா?? ;)

Unknown சொன்னது…

//என்னதான் சொல்லு...
உன்னிடம் சண்டையிடும்
சுகமே தனிதான்....
'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....//

குட்டி குட்டியா சண்டையா?? ஹை இது நல்லாருக்கே..!! :))

Unknown சொன்னது…

//என்னை எப்படியெல்லாம்
திட்டினாய்
இனி ஜென்மத்துக்கும்
உன்னிடம் பேச மாட்டேன்
என கோபமாகச் சொன்னால் எப்படி..?
சரி உன் இஷ்டம் ...
அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?//

:)))))

Unknown சொன்னது…

//உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??//

இப்ப தெரிஞ்சிருக்கும்..!! :))

Unknown சொன்னது…

//சும்மா இருந்தால்
மறந்து விடுவேன் என
நினைத்துதானே
என்னிடம் சண்டை போட்டு
ஒவ்வொருநொடியும்
உன்னைநினைக்க வைக்கிறாய்...?
சரியான நினைவு திருடிடி நீ...//

நினைவு திருடி??வித்தியாசமா ஆனா அழகா இருக்கு..!! :))

Unknown சொன்னது…

//நீ இவ்வளவு
ரோஷக்காரியாடி..??
ம்ம்ம்ம்...
கொஞ்சம் எனக்கும்
உன் ரோஷத்தைக்
கடன் கொடேன்...
உன் குரல் கேட்டாலே
எங்கோ
அதுதொலைந்து
போகிறது...//

:))))))

இராம்/Raam சொன்னது…

நவீன்,

நல்லாயிருக்கு... :)

இரவு கவி சொன்னது…

supero superunga eppadi ithu unga nala mattum mudiuthu. kavithai eluthittu photo select pannuveengala illa photo select pannitu kavithai eluthuveengala :-)

FunScribbler சொன்னது…

//அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?//

எப்படிங்க இப்படி!!! பின்றேள்!!

//உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??//

சூப்பர்ர்ர்ர்ர்!!marvellous one! really superrbb!

//எத்தனை முத்தங்கள்
செலவாகப்
போகின்றனவோ..??!!!//

எப்படி நவீன்....உட்கார்ந்து யோசிப்பீங்களோ!! இல்ல..அனுபவமா?:))

MSK / Saravana சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு நவீன்..

பெயரில்லா சொன்னது…

இதமான கவிதை, இன்பங்கள் பல நிறைந்த படங்கள்...சூப்பருங்க..எப்படி இப்படியெல்லாம்??? நல்லாயிருக்கு...தொடருங்க,காத்துக்கொண்டிருக்கிறேன் தங்களின் அடுத்த படைப்பிற்கு...

எழில்பாரதி சொன்னது…

கவிஞரே அருமை!!!!

ஊடல்களுக்கு பிறகு காதல் அதிகம் ஆகும் என்பதை உங்களது கவி வரிகளில் அழகாய் விவரித்து இருக்கிங்க!!!!

எழில்பாரதி சொன்னது…

//சும்மா இருந்தால்
மறந்து விடுவேன் என
நினைத்துதானே
என்னிடம் சண்டை போட்டு
ஒவ்வொருநொடியும்
உன்னைநினைக்க வைக்கிறாய்...?
சரியான நினைவு திருடிடி நீ...//

அருமையான கவிதை...

”நினைவு திருடி” வார்த்தை அழகாய் இருக்கு!!!

எழில்பாரதி சொன்னது…

//என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??//


மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!!!!

தொடருங்கள் வாழ்த்துகள்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

ஊடல் அழகு! அதில் தோன்றிய வரிகள் அறுதம் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??
//

suerb கவிஞரே!

பெயரில்லா சொன்னது…

உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்!!!


Choooooo cute!!!!

Aruna சொன்னது…

எப்போதும் போல அழகு கவிதைகள்......ரொம்ப இடைவேளி விட்டு எழுதுகிறீர்கள்....அடிக்கடி எழுதலாமே..
அன்புடன் அருணா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

ஊடலில் பிறந்த 'காதல்'கவிதை அருமை;)) //

வாங்க திவ்யா.. :)))
அருமையான வருகைக்கு நன்றி... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....\\

சண்டையிடும் 'குரலை' ரசிப்பதும் ஓர் அழகுதான்....காதலில்:)) //

ரசிப்பு என வந்துவிட்டால் அது கொஞ்சும் குரலென்ன சண்டையில் விஞ்சம் குரலென்ன..? சரிதானே திவ்யா..? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??\\

மரமண்டையா??

ஹும்....'எதற்கெடுத்தாலும்' என்ற வார்த்தையை.......உன்னை எடுக்கத்தான் என்று அர்த்ததுடன் எழுதியிருப்பது அருமை:)) //

அட செல்லமா மரமண்டைனு சொன்னா தப்பா என்ன..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\வார்த்தைகளால்
உன்னைக்காயப்படுத்துகிறேன்
என ஏண்டி அபாண்டமாக‌
பழிசொல்கிறாய்...??
நீ காயப்பட்டால்
வலிக்கப் போவது
எனக்குத்தான்
எனத் தெரியாதா உனக்கு..?\\

அற்புதமான வரிகள்:))

மனதை தொட்டன!! //

மனதை தொட்டுவிட்டனவா..?? :)))) நன்றி ...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இனியவள் புனிதா said...

வாவ் எல்லாமே சூப்பர் நவீன். கொஞ்சலினால் மிஞ்சுவதுகூட அழகுதான் போல :-) வாழ்த்துகள்! //

வாருங்கள் புனிதா... :)))
எப்படி இருக்கிறீர்கள்..? மிக்க நன்றி சூப்பரான வருகைக்கும்.... அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...

\\ஏதோ சண்டையை
ஆரம்பித்து
வைத்துவிட்டேன்
உன்னை
சமாதானப்படுத்துவதற்குள்
எத்தனை முத்தங்கள்
செலவாகப்
போகின்றனவோ..??!!!\\


செலவு செய்தால்தான் 'வரவு'ம் கிடைக்கும் கவிஞரே!!! //

ஆஹா அப்படியா என்ன..?? எனக்குத் தெரியாதே..!!! ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

\\என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??\\


நெஞ்சை தொடும் வார்த்தைகள்:(//

ம்ம்ம்.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...

கவிதை முழுவதுமாய் 'வழக்கம்போல்' அசத்தல்!!

வாழ்த்துக்கள் நவீன்! //

மிக்க நன்றி திவ்யா..
அசத்தலான வருகைக்கும்.. மிக அசத்தலான தருகைக்கும்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...

//என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??
//

உண்மைகளை வரிகளுக்குள் அடக்கியிருக்கிறீர்கள். ரசனையுடன் ரசித்தேன். //

வாருங்கள் நிர்ஷன் :))))
மிக்க நன்றி... அழகான ரசிப்புக்கும்... உண்மையான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

Me the first?? //

வாங்க ஸ்ரீ :)))
முதலென்ன கடைசியென்ன..? வருகையே உவகைதானே..? !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

நீ ஆரம்பித்தால்
என்ன
நான் ஆரம்பித்தால்
என்ன‌
சண்டையின் முடிவை
எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?
கொஞ்சல்களிலா..
இல்லை மிஞ்சல்களிலா..//

அச்சச்சோ ஒரே கொஞ்சல்ஸ்..!! ;)) //

அட அமாங்க ஸ்ரீ....
lightaa... ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

//நீ
கோபமாயிருக்கையில்
உன்னைக் கொஞ்சும் போது
அதை ரசிக்காத மாதிரி
நீ நடித்துக்கொண்டிருக்கும் போது
இன்னும் கொஞ்சம் அழகாக
இருக்கடி செல்லம்//

அப்படியா அண்ணா?? ;) //

அட நமக்கேவா ஸ்ரீ..? ச்ச்சும்மா கற்பனைதானே ..? எப்படி இருந்தால் என்ன..?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

//என்னதான் சொல்லு...
உன்னிடம் சண்டையிடும்
சுகமே தனிதான்....
'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....//

குட்டி குட்டியா சண்டையா?? ஹை இது நல்லாருக்கே..!! :)) //

அப்படியா ஸ்ரீ..?? :))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

//என்னை எப்படியெல்லாம்
திட்டினாய்
இனி ஜென்மத்துக்கும்
உன்னிடம் பேச மாட்டேன்
என கோபமாகச் சொன்னால் எப்படி..?
சரி உன் இஷ்டம் ...
அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?//

:))))) //

:)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Sri said...

//உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??//

இப்ப தெரிஞ்சிருக்கும்..!! :)) //

அட என்ன ஸ்ரீ...
தெரிஞ்சிருக்குமா..? அட யாருக்கும்மா..?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

//சும்மா இருந்தால்
மறந்து விடுவேன் என
நினைத்துதானே
என்னிடம் சண்டை போட்டு
ஒவ்வொருநொடியும்
உன்னைநினைக்க வைக்கிறாய்...?
சரியான நினைவு திருடிடி நீ...//

நினைவு திருடி??வித்தியாசமா ஆனா அழகா இருக்கு..!! :)) //

மிக்க நன்றி ஸ்ரீ.. அழகான ரசிப்புக்கு...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...

//நீ இவ்வளவு
ரோஷக்காரியாடி..??
ம்ம்ம்ம்...
கொஞ்சம் எனக்கும்
உன் ரோஷத்தைக்
கடன் கொடேன்...
உன் குரல் கேட்டாலே
எங்கோ
அதுதொலைந்து
போகிறது...//

:)))))) //

:)))
மிக்க நன்றி ஸ்ரீ... அழகான வருகையும் மிக அழகான தருகையும் மகிழ்ச்சியளிக்கிறது....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...

நவீன்,

நல்லாயிருக்கு... :) //

வாங்க ராம்.. :)))
மிக்க நன்றி... தவறாத வருகைக்கும்... மிகவும் அழகான தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இரவு கவி said...

supero superunga eppadi ithu unga nala mattum mudiuthu. kavithai eluthittu photo select pannuveengala illa photo select pannitu kavithai eluthuveengala :-) //

வாங்க இரவுக்கவி.. :)))

இரவில் மட்டும் கவிதை எழுதுவீர்களோ..?? ;)))

கவிதை எழுதிவிட்டு தான் போட்டோ தேடுவேன்... :))) மிக்க நன்றி கவி... வருகையும் தருகையும் சூப்பர்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaangani said...

//அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?//

எப்படிங்க இப்படி!!! பின்றேள்!! //

வாங்க காயத்ரி... :)))
அட நீங்க வேற எனக்குப் பின்னவே தெரியாதுங்கோ.. ;))))

//உன்னிடம் நான்
எதற்கெடுத்தாலும்
சண்டையிடுவதாய்
என்னிடம் கோபமாகச்
சொல்கிறாய்
எதையோ அல்ல...
உன்னை எடுக்கத்தான்..
என உன் மரமண்டைக்கு
தெரியவில்லையாடி...??//

சூப்பர்ர்ர்ர்ர்!!marvellous one! really superrbb! //

ohhh... thank U.. thank U.. thank U...

//எத்தனை முத்தங்கள்
செலவாகப்
போகின்றனவோ..??!!!//

எப்படி நவீன்....உட்கார்ந்து யோசிப்பீங்களோ!! இல்ல..அனுபவமா?:)) //

தமிழ் இதுதானே வேணாங்கறது...!! கவிதை எழுதர உங்களுக்குத் தெரியாதா என்ன ..?? ;))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா இருக்கு நவீன்.. //

வாங்க சரவணன்... :)))
மிக்க நன்றி ... அழகான வருகைக்கும் தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மலர்விழி said...

இதமான கவிதை, இன்பங்கள் பல நிறைந்த படங்கள்...சூப்பருங்க..எப்படி இப்படியெல்லாம்??? நல்லாயிருக்கு...தொடருங்க,காத்துக்கொண்டிருக்கிறேன் தங்களின் அடுத்த படைப்பிற்கு... //

வாங்க மலர்விழி.. :)))
எல்லாம் உங்களை மாதிரி ரசிகர்களின் ஆசீர்வாதம் தாங்க.. :))
மிக்க நன்றி மலர்விழி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

கவிஞரே அருமை!!!!

ஊடல்களுக்கு பிறகு காதல் அதிகம் ஆகும் என்பதை உங்களது கவி வரிகளில் அழகாய் விவரித்து இருக்கிங்க!!!! //

வாங்க எழில்... :)))
மிக்க நன்றிங்க....:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

//சும்மா இருந்தால்
மறந்து விடுவேன் என
நினைத்துதானே
என்னிடம் சண்டை போட்டு
ஒவ்வொருநொடியும்
உன்னைநினைக்க வைக்கிறாய்...?
சரியான நினைவு திருடிடி நீ...//

அருமையான கவிதை...

”நினைவு திருடி” வார்த்தை அழகாய் இருக்கு!!! //

அப்படியா எழில்..? :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...

//என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??//


மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!!!!

தொடருங்கள் வாழ்த்துகள் //

வாங்க எழில்.. :))
ரசனையான தருகையும் தொடர்ந்த வருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sathish said...

ஊடல் அழகு! அதில் தோன்றிய வரிகள் அற்புதம் :) //

வாங்க கவிஞரே...
எப்படி இருக்கிறீர்கள்..?? :)))
மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// sathish said...

//
என்னதான் உன் மீது
கோபம் வந்தாலும்
எல்லாவற்றையும்
வற்ற வைக்கும் உன்
ஒரு துளி கண்ணீரை
என்ன‌செய்வது நான்....??
//

suerb கவிஞரே! //

வாங்க சதீஷ்.. :)))
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது சூப்பரான வருகையும் தருகையும்...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sathananthan said...

உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்!!!


Choooooo cute!!!! //

வாருங்கள் சதானந்தன்.. :)))
choooo chweet.... தங்கள் முதன் வருகையும் மிக அழகான தருகையும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Aruna said...

எப்போதும் போல அழகு கவிதைகள்......ரொம்ப இடைவேளி விட்டு எழுதுகிறீர்கள்....அடிக்கடி எழுதலாமே..
அன்புடன் அருணா //

வாருங்கள் அருணா..:)))
அப்படியா..? நன்றி... :)))
அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன் கண்டிப்பாக ... சரியா..? :))))

Naveen Kumar சொன்னது…

கொஞ்சலுடன் மிஞ்சும் கவிதை அருமை:-)

Praveena சொன்னது…

மிஞ்சும் கொஞ்சல்கள் அருமை:-)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Naveen Kumar said...

கொஞ்சலுடன் மிஞ்சும் கவிதை அருமை:-) //

வாருங்கள் நவீன்குமார்.. :)))

வருகையும் தருகையும மிக்க மகிழ்ச்சியளிக்கிறது !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Praveena said...

மிஞ்சும் கொஞ்சல்கள் அருமை:-) //

வாருங்கள் ப்ரவீனா.. :)))

வருகையும் தருகையும கொஞ்சலையும் மிஞ்சுகிறது.. !!! :))

( என்ன ஆச்சு ஜெனி... கவிதையே காணோம்...??
கொஞ்சம் எழுதேன்... )

மஹாராஜா சொன்னது…

எல்லா கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு...
தனி தனியா பின்னூட்டம் போடலாம்..
சூப்பர் அப்பு..

மஹாராஜா சொன்னது…

//நீ
கோபமாயிருக்கையில்
உன்னைக் கொஞ்சும் போது
அதை ரசிக்காத மாதிரி
நீ நடித்துக்கொண்டிருக்கும் போது
இன்னும் கொஞ்சம் அழகாக
இருக்கடி செல்லம்//

இதை ரசித்தேன்..
ரசித்து இருக்கிறேன்..

Praveena சொன்னது…

\
( என்ன ஆச்சு ஜெனி... கவிதையே காணோம்...??
கொஞ்சம் எழுதேன்... )\\

கொஞ்சம் பிஸி அதான் கவிதை எழுத நேரமில்லை....நீங்கள் விரும்பி கேட்டதால் ஒரு கவிதை பதிவிட்டிருக்கிறேன், நேரம் கிடைக்கிறப்போ படிச்சு கருத்து சொல்லுங்க:-)

பெயரில்லா சொன்னது…

//என்னை எப்படியெல்லாம்
திட்டினாய்
இனி ஜென்மத்துக்கும்
உன்னிடம் பேச மாட்டேன்
என கோபமாகச் சொன்னால் எப்படி..?
சரி உன் இஷ்டம் ...
அப்போ நான் என்ன செய்தாலும்
சிணுங்கக் கூட கூடாது
சரியாடி..?//

Indha kavidhai romba sokka keedhu vaadhiyaaare. Ippadiye ellarum amaidhiya irundhuta naade amaidhi poongaaava maaaridumla ;)

priyamudanprabu சொன்னது…

நீ இவ்வளவு

ரோஷக்காரியாடி..??

ம்ம்ம்ம்...

கொஞ்சம் எனக்கும்

உன் ரோஷத்தைக்

கடன் கொடேன்...

உன் குரல் கேட்டாலே

எங்கோ

அதுதொலைந்து

போகிறது
...............

நல்லாயிருக்கு

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
என்னதான் சொல்லு...
உன்னிடம் சண்டையிடும்
சுகமே தனிதான்....
'காச்' 'மூச்' சென்று
சண்டையிடும் உன்
அழகான குரலுக்காகவேணும்
உன்னிடம் குட்டி குட்டியாய்
சண்டையிட வேண்டும் நான்....
\\

அவள் சண்டை பிடிக்கிற அழகும் ரசிக்கும்படிதான் இருக்கிறது இல்லையா ?

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
நீ ஆரம்பித்தால்
என்ன
நான் ஆரம்பித்தால்
என்ன‌
சண்டையின் முடிவை
எங்கிருந்துஆரம்பிக்கட்டும்..?
கொஞ்சல்களிலா..
இல்லை மிஞ்சல்களிலா..
\\

அவளோடு சண்டை பிடிக்கிற சந்தோசமும் இடைக்கிடை வேண்டும் என்கிறீர்களா கவிஞரே...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

\\
நீ இவ்வளவு
ரோஷக்காரியாடி..??
ம்ம்ம்ம்...
கொஞ்சம் எனக்கும்
உன் ரோஷத்தைக்
கடன் கொடேன்...
உன் குரல் கேட்டாலே
எங்கோ
அதுதொலைந்து
போகிறது...
\\

ம்ம்ம்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

இப்பபொழுது முன்பு போல இணையத்தில் இருக்க முடிவதில்லை அதனால் உங்கள் பக்கம் வருவதற்கு முடியாமல் போய்விட்டது....

கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணன்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

காதல் பெண்கள் ஊடுகிற சுகமே தனிதான்...!இல்லையா அண்ணன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

எல்லா கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு...
தனி தனியா பின்னூட்டம் போடலாம்..
சூப்பர் அப்பு..//

வாங்க மஹாராஜா.. :)))

மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தங்கள் வருகையும் அழகான தருகையும்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

//நீ
கோபமாயிருக்கையில்
உன்னைக் கொஞ்சும் போது
அதை ரசிக்காத மாதிரி
நீ நடித்துக்கொண்டிருக்கும் போது
இன்னும் கொஞ்சம் அழகாக
இருக்கடி செல்லம்//

இதை ரசித்தேன்..
ரசித்து இருக்கிறேன்.. //

அஹா ரசித்தும் இருக்கிறீர்களா மஹாராஜா..? கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்... :)))

வருகையும் தருகையும் மிக அருமை.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Praveena said...

\
( என்ன ஆச்சு ஜெனி... கவிதையே காணோம்...??
கொஞ்சம் எழுதேன்... )\\

கொஞ்சம் பிஸி அதான் கவிதை எழுத நேரமில்லை....நீங்கள் விரும்பி கேட்டதால் ஒரு கவிதை பதிவிட்டிருக்கிறேன், நேரம் கிடைக்கிறப்போ படிச்சு கருத்து சொல்லுங்க:-) //

வா ஜெனி.. :)))
அட அப்படியா..? கண்டிப்பா சொல்றேன்.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பிரபு said...

நீ இவ்வளவு

ரோஷக்காரியாடி..??

ம்ம்ம்ம்...

கொஞ்சம் எனக்கும்

உன் ரோஷத்தைக்

கடன் கொடேன்...

உன் குரல் கேட்டாலே

எங்கோ

அதுதொலைந்து

போகிறது
...............

நல்லாயிருக்கு //

வாங்க பிரபு.. :)))
மிக்க நன்றி அழகான ரசிப்பிற்கும் வருகைக்கும்... :))

நாமக்கல் சிபி சொன்னது…

:))