பேச்சி காதை :
ஐஸ்வண்டிகாரனிடம்
ஒருகுச்சி ஐஸ்வாங்கி
ரெண்டுபேரும் சுவச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன ?
நவாப்பழம் தின்னுபுட்டு
நாக்கு மேல நாக்கு வச்சு
கலர் பார்த்தகதையத்தான்
மறந்துட்டு தான்
போனதென்ன?
எளநுங்க தேடிப்போயி
பனங்காட்டு ஓடையிலே
நுங்குதின்ன சேதியதான்
மறந்துட்டு தான்
போனதென்ன?
கரும்பு காட்டுகுள்ள
கன்னிவக்க போலாமின்னு
நுனிக்கரும்ப ருசிச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன?
இடையத்தான் தொட்டுகிட்டு
சைக்கிள் ஓட்ட கத்துத்தந்தே
கீழே விழுகாம முழுகாம
ஆகிபுட்டேன் !
சீக்கிரமா நீ வந்தா
தாலிகட்டி கூட்டிடுபோ
இல்லையினா கோடித்துணி
வாங்கியாந்து தூக்கிட்டு போ !
அவன் காதை :
பிஸ்ஸாவ பார்த்தாலும்
பிசாசா உன் நெனப்பு
டின்பீரு குடிச்சாலும்
பொங்குது உன்
கதகதப்பு !
கவுனத்தான் போட்டுகிட்டு
பலபேரு போனாலும்
உன் கண்டாங்கி சேலை போல
இல்லயடி சின்ன சிறுக்கி !
பின்லேடன் போலநானும்
பதுங்கித்தான் போனாலும்
ஜார்ஜ்புஷ்ஷபோல
தொரத்துதடி உன் நெனப்பு !
சீமச்சரக்கடிக்க
பாருக்குதான் போனாலும்
நீ பாக்குறப்போ உள்ள ‘கிக்’கு
எதுலயுமே இல்லையடி !
ஜல்லிகட்டு காளைபோல
உன்நெனப்பு துள்ளுதடி
அடக்கத்தான் முடியாம
ஆஞ்சுபோயி நின்னுருக்கேன் !
பொங்கப் பானை போல
பொங்குதடி என் மனசு
சீத்த முள்ளுபோல
ஆகிபோச்சு என்படுக்கை !
சீவி முடிஞ்சுக்கோ
சீக்கிரமா நான் வாரேன்
கண்ணைத் தொடச்சுக்கோ
உன்னகொண்டு நான்போறேன் !
14 கருத்துகள்:
பிரகாஷ், அருமையாக இருக்குது.
கிராமத்தையும் நகரத்தையும் நகைச்சுவையாக சொன்னது அருமையாக இருக்குது.
வருகைக்கு நன்றி பரஞ்ஜோதி !
துரை..
இரு கவிதைகளும் மிக மிக அருமை....
புல்லரிக்க வைக்கிறது உந்தன் புலமை.....
உனை நினைத்து நான் அடைகிறேன் பெருமை....
மார்ஷ்
மறைக்காடன், மார்ஷ்
என் கவிதைக்கு அளித்த உரத்திற்கு நன்றி பல !
விமர்சனம் எழுத
வார்த்தை வருது இல்லை..
அசத்திடீங்க போங்க
நேசமுடன்
-நித்தியா
என்ன சொல்ல நித்யா ?!
தங்களின் பின்'ஊட்டம்' !
கிராமத்து மணத்தோட இயல்பான நடையோட உங்க கவிதை அருமைங்க.
மிக்க நன்றி கைப்புள்ளே !
பேரே கலக்கலா இருக்கு !
அருமையான முயற்சி
பாட்டுக்கு பாட்டு போல கவிதைக்கு கவிதையா..
நல்லா இருக்கு.
"உன்னகொண்டு நான் போரேன்" - போறேன் என்பது சரி. திருத்திவிடுங்கள்.
வருகைக்கும் தருகைக்கும் நன்றி கீதா ! திருத்திவிட்டேன் :)
வாவ், சூப்பரா எழுதியிருக்கிறீங்க நவீன், பாராட்டுக்கள்!!
//Divya said...
வாவ், சூப்பரா எழுதியிருக்கிறீங்க நவீன், பாராட்டுக்கள்!! //
வாங்க திவ்யா :))
பாராட்டுகள் எனக்கு டானிக் :)) மிக்க நன்றி திவ்யா :))
வைரமுத்துவின் குரல் தொனியில் உங்கள் கவிதை வரிகளை எண்ணிப்பார்த்தால்.....இயல்பான ஒரு கிராமிய காதல் மணம் கமிழ்கிறது!
// Divya said...
வைரமுத்துவின் குரல் தொனியில் உங்கள் கவிதை வரிகளை எண்ணிப்பார்த்தால்.....இயல்பான ஒரு கிராமிய காதல் மணம் கமிழ்கிறது!//
வாங்க திவ்யா..:))
எவ்ளோ நாட்கள் முன் எழுதியது இந்த வரிகள்....
ரசித்து படித்து விமர்சித்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது
திவ்யா..:)))
கருத்துரையிடுக