மயக்கும் விழிகளில்
மன்மதன் ஆயுதம்
ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்
வீழும் கார்குழல்
நாணலின் ஊர்வலம்
நினைக்கும் பொழுதினில்
நனையும் ஓர்வனம்
ஊடும் பொழுதுகள்
தோற்கும் நொடிகளில்
சீறும் வேங்கையாய்
கூடல் பிறந்திடும்
வேண்டாம் என்றுதான்
வாய்மொழி சொல்லினும்
வேண்டும் என்றெனை
விரல்கள் வீழ்த்திடும்
கெஞ்சும் இதழ்களில்
எந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கனங்களில்
சிந்தை அறுந்திடும்
கூடலின் பிறப்பு
ஊடலின் இறப்பு
ஆதலால் கூடுவீர்
அதன்முன் ஊடுவீர்!
மன்மதன் ஆயுதம்
ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்
வீழும் கார்குழல்
நாணலின் ஊர்வலம்
நினைக்கும் பொழுதினில்
நனையும் ஓர்வனம்
ஊடும் பொழுதுகள்
தோற்கும் நொடிகளில்
சீறும் வேங்கையாய்
கூடல் பிறந்திடும்
வேண்டாம் என்றுதான்
வாய்மொழி சொல்லினும்
வேண்டும் என்றெனை
விரல்கள் வீழ்த்திடும்
கெஞ்சும் இதழ்களில்
எந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கனங்களில்
சிந்தை அறுந்திடும்
கூடலின் பிறப்பு
ஊடலின் இறப்பு
ஆதலால் கூடுவீர்
அதன்முன் ஊடுவீர்!
9 கருத்துகள்:
:)
நன்றி தேவ் !
கூடலுக்குப் பின் வரும் ஊடல் - சோகம். ஊடலுக்குப்பின் வரும் கூடலோ சுகம். அதை கவிதையில் காண்பது இன்னும் சுகம்.
உங்கள் கவிதை வாசிக்க - சுகம்!
:-) :-)
no comments
:-)
நேசமுடன்..
-நித்தியா
உங்கள் பின்னூட்டங்கள் அதனினும் சுகம் பாலு !
நன்றி நித்யா உரைக்காமல் உணர்த்தியதற்காக !
ஆஹா.......கூடலுக்காக ஊடலா?
ஊடலினால் கூடலா??
கவிதை வரிகள் அருமை,
செய்யுள் நடையில் உங்க கவிதை படித்ததே இல்லை......ஆனா அதுவும் உங்கள் எழுத்தில் ரொம்ப நல்லாயிருக்கு!
\ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்\
ஏந்திழை- அப்படின்னா என்ன??
//Divya said...
ஆஹா.......கூடலுக்காக ஊடலா?
ஊடலினால் கூடலா??
கவிதை வரிகள் அருமை,
செய்யுள் நடையில் உங்க கவிதை படித்ததே இல்லை......ஆனா அதுவும் உங்கள் எழுத்தில் ரொம்ப நல்லாயிருக்கு! //
வாங்க திவ்யா.. :)))
அட அப்படியா என்ன..?
இது நான் எப்போதோ எழுதிய கவிதை...
இப்போதுதான் என் நடை மாற்றிவிட்டேன்.. :))
மிக்க மகிழ்ச்சி.. !!!
கருத்துரையிடுக