வெள்ளி, மார்ச் 10, 2006

இணைய சங்கிலியில் - எனதும்



நானும் சங்கிலியில்
இணைய அழைத்த கிளி
நித்தியா என்றொரு கவி
சொல்ல ஏதுமில்லைதான்
இருந்தும் பதிகிறேன்
மலையுச்சியின் கோவிலில்
பெயர் பதியும் ஒரு
மாணவனைப் போல ...



வாழ்ந்த 4 இடம்

புதுக்கோட்டை
குளித்தலை
திருச்சி
தும்க்கூர்

விடுமுறைக்குச் சென்ற 4 இடம்

பெங்களூர்
ஊட்டி
கொடைக்கானல்
கோவா

இப்பொழுது பார்த்தாலும் சலிக்காத 4 படம்

மொளனராகம்
பன்னீர்ப்புஷ்பங்கள்
இன்று போய் நாளை வா
பாலுமேந்திராவின் படைப்புகள் அனைத்தும்

பிடித்த 4 உணவு

தயிர் சாதம்
வறுத்த மீன்
அம்மா செய்யும் மட்டன்பிரியாணி
மிளகுகறி

தினமும் பார்க்கும் 4 இணையம்

ஜிமெயில்
தேன்கூடு
யாஹூ
தமிழ் மணம்

அனைவரையும் அழைக்க விருப்பம்தான் ! ஆனால் கோவில் சுவர்களில் ஏற்கனவே பதியப்பட்ட பல பெயர்கள்.


இடையில் எனதும்...

6 கருத்துகள்:

J S Gnanasekar சொன்னது…

புதுக்கோட்டைன்னா? தொண்டைமான் புதுக்கோட்டையா? இல்ல துத்துக்குடி புதுக்கோட்டையா?

நமக்கு தொண்டைமான் புதுக்கோட்டைங்க. இந்த தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி நகரத்தில், பழனியப்பா தியேட்டர் பக்கத்துலதான் ஒரு காலத்துல இருந்தேன். பால்ப்பண்ணையில இருந்து, மச்சுவாடி வரைக்கும் நமக்கு நெறைய பேரத் தெரியுமுங்க. ஆனா, அவுங்கதான் என்ன மறந்திருப்பாங்க.

-ஞானசேகர்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க ஞானசேகர்
தொண்டைமான் புதுக்கோட்டை தான்.ஆனால் நான் பள்ளிபடிப்பை ஆரம்பிக்கும் சமயம் குளித்தலைக்குச் சென்றுவிட்டோம்.மச்சுவாடியில்தான் நான் இருந்தேன்.அங்கு ஒரு சர்ச் இருந்ததாக ஞாபகம் !!

பெயரில்லா சொன்னது…

அடடடா ஞானசேகரும் நீங்களும் ரோம்ப
நெருங்கிட்டீங்க போல?
:-)

நேசமுடன் கிளி :-p
-நித்தியா..!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

வாங்க நித்தியா
இணையம் இணைவதற்கே! ஆச்சரியம் தான் !

J S Gnanasekar சொன்னது…

ஆமாங்க மச்சுவாடியில் ஒரு சர்ச் உண்டு. எனது முதல் வகுப்பு புகைப்படத்தின் பின்னணியே அந்த சர்ச்தான். பார்த்து பதின்மூன்று வருடங்கள் ஆனாலும், ஒரு விஷயத்தில் அதை மறக்க முடியாது. "ஓர் அரச மரத்தின் பாதியில் வளர்ந்து நிற்கும் ஒரு பனைமரம்" அந்த சர்ச் பக்கத்தில் உண்டு. சின்ன வயதில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று அது. இப்போதும் அது இருக்கிறதா? யாராவது சொல்லுங்களேன்.

-ஞானசேகர்

பெயரில்லா சொன்னது…

Kalakura Machi!