அம்மாகூட
நடந்து வந்தா
கண்ணாலயே
திங்குற
தன்னந்தன்னியா
தனிச்சு வந்தா
தோப்போரமா
பதுங்கற
மச்சுல மேல
நின்னுகிட்டு
மொறைச்சு மொறைச்சு
பாக்குற
நான் பார்த்தா
மட்டும்
குழந்தைய போல
சிரிச்சு சிரிச்சு
மயக்குறே
யாரும் இல்லா
சமயதுல
பதுங்கி பதுங்கி
ஒதுங்குறே
அக்கம்பக்கம்
அரவம் கேட்டா
அய்யய்யோன்னு
ஓடுறே
பக்கம் வந்து
நானும் நின்னா
கொஞ்சி கொஞ்சி
பேசுறே
நானும் சேர்ந்து
சிரிச்சுப்புட்டா
கொஞ்சம் மிஞ்சப்
பாக்குற
மச்சக் குறி
சொல்லறேன்னு
மிச்சம் காட்ட
துண்டுறே
எச்சம் சொச்சம்
வைக்கலாம்னா
கழுத்தைக் கட்டித்
கெஞ்சுறே !
பழமா காயா
சொல்லறேன்னு
தொட்டுத் தொட்டு
மயக்குறே
பக்கம் வந்து
கிட்டநின்னு
பூனையாட்டம்
சிணுங்கறே
ஏடாகூடம்
ஆகிடும்னு
சொன்னா
மூக்கை விடச்சு
மொறைக்கறே
கண்ணால் என்னை
கன்னம் வச்சு
தப்புப்பண்ண
தூண்டுற
சும்மா சும்மா
பசப்பாம என்
கழுத்தில் தாலி
கட்டுடா
அப்புறம் பாரு
சேதி தெரியும்
நீ கெஞ்ச கெஞ்ச
கொஞ்சுவேன்
4 கருத்துகள்:
காதல் சுகம்
கன்னி பார்வையில்
கள்ள பார்வை
கள்ள பார்வை
மெல்ல நகர்ந்து
சொல்வார்த்தை சுகமாகி
சொந்தம் சேர்வதெப்போ?
வருக குமார்,
அவள் நினைத்தாலே போதும்
இவன் மனம் தன்னாலே ஆடும்
கன்னி பார்த்தாலே போதும்
உயிர் சொல்லாமலே போகும்!
யாதுமாகி விட்டவளே
இவ்வுடலின் சொந்தக்காரி
அடடடா..
இப்படிக் கவிதை
எழுதி எங்களையும்
எழுத தூண்டுற :-)
நீங்கள் கவிஞர்
நாங்கள் எந்த மட்டுக்கு?
நல்லா இருக்கு நவீன்
நேசமுடன்..
-நித்தியா
வாங்க நித்தியா !
இப்படி சொல்லிச்
சொல்லியே
சொக்க வைக்கிறே!:-))
வருகைக்கும் தருகைக்கும் நன்றி !
கருத்துரையிடுக