செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

கள்ளினும்...

Image Hosted by ImageShack.us



நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு


Image Hosted by ImageShack.us





நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?





Image Hosted by ImageShack.us





ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !



Image Hosted by ImageShack.us






முத்தமிட்டுவிட்டு
பார்ட்டிக்கு போய்
குடிச்சிட்டு வருவீங்களா ?
என ஒன்றுமே தெரியாதவள் போல்
கேட்கிறாய் !
ஏற்கனவே போதையேற்றிவிட்டு
என்ன இது கேள்வி ?



Image Hosted by ImageShack.us






ஏங்க இப்போ
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?







Image Hosted by ImageShack.us







இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..


வெள்ளி, ஆகஸ்ட் 11, 2006

பொய்மையும் பெண்மையிடத்து

பொய் சொல்ல மாட்டேன்


இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரிம்மா இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!





போடா பொறுக்கி
<
ஏதோ சொல்லிவிட்டதற்காக
என் முகத்தில் இனி
முழிக்காதே என
சொல்லிவிட்டாய்.
சரி இனி தினமும்
காலையில் கண்ணை
மூடிக்கொண்டே உனக்கு
முத்தம் தர வேண்டியதுதான் போல
என நான் சொன்னதும்
போடா பொறுக்கி என
செல்லமாக திட்டிவிட்டு
வேகமாக வந்து ஒட்டிக்கொள்கிறாய்
அழகான வெட்கத்துடன் !





Image Hosted by ImageShack.us

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !





கோபமான அழகு

ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !






ஐஸ் வைக்காதீங்க


இந்தப் புடவை
அழகா இருக்கா
என உனக்குப் பிடித்த
புடவையை காட்டி கேட்கிறாய்
அழகாத்தான் இருக்கு
ஆனா உன்னைவிட இல்லை
என நான் கூறியதைக்
கேட்டு ‘போதும் ரொம்ப
ஐஸ் வைக்காதீங்க’
என என் பொய்யை
ரசித்துக்கொண்டே
சொல்கிறாய்