வியாழன், ஜூலை 12, 2007

அழகான பொய்...


என்னை ஓரகண்ணால்
பார்த்துக்கொண்டே
பக்கத்தில் உள்ள
உன் தோழியிடம்
பேசிக்கொண்டு
அப்படியே ஏதோ
எழுதுவதுபோல்
நடித்துக்கொண்டிந்தபோதுதான்
புரிந்தது எப்போதும்
புரியாத இந்த
‘ மல்டி டாஸ்கிங்’






ஆசிரியருக்கு தெரியாமல்
‘பிட்’ அடிக்கும்போது
கிடைக்கும் ‘ த்ரில்’
நீ பார்க்காத போது
உன்னை ‘சைட்’
அடிக்கும்போது கிடைக்கிறது
தெரியுமா?






கெமிஸ்ட்ரி ‘லேப்’ பில்
இவள்தான் என உன்னை
நண்பர்கள் காட்டியபோதுதான்
உணர்ந்தேன்
நீ ஒரு தாவணி கட்டிய
‘ கோனிகல் ப்ளாஸ்க் ‘ என





இந்த ‘லேப்டாப்’பிற்கு
மட்டும் ஏன்
சுரிதார் போட்டு விட்டிருக்காங்க
அப்பாவியாய் கேட்டேன்
உன்னை ‘கம்ப்யூட்டர் லேப்’ பில்
பார்த்த போது





சொல்ல தயங்கி நீ
சொன்ன
‘ எனக்கு உன்னை
பிடிச்சிருக்கான்னு
தெரியலை! ‘
நீ சொன்னதிலேயே
அழகான பொய்
இதுதான் தெரியுமா ?

32 கருத்துகள்:

வெங்கட்ராமன் சொன்னது…

சில நிமிடங்கள் கல்லூரி நாட்களுக்கு சென்று வந்தது போல் உணர்ந்தேன் . . . . . . .

ச.பிரேம்குமார் சொன்னது…

என்ன நவீன், கல்லூரி ஞாபகமா? ஒரே டெக்னில் கவிதையா பொழிந்து தள்ளிட்டீங்க‌ :-)

பெயரில்லா சொன்னது…

கண்ண கட்டுது சாமிகளா
உட்டுடுங்கப்பா..இந்த பொண்ணுகளையும் ..பொய்யையும்

முரளிகண்ணன் சொன்னது…

ரசித்தேன்

பெயரில்லா சொன்னது…

‘ மல்டி டாஸ்கிங்’ க்கு இப்படி ஒரு definition a! ada kadavule!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// வெங்கட்ராமன் said...
சில நிமிடங்கள் கல்லூரி நாட்களுக்கு சென்று வந்தது போல் உணர்ந்தேன் . //

வாங்க வெங்கட்ராமன் :))))
கல்லூரி என்றாலே மகிழ்ச்சிதான் இல்லையா??;)))) நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// பிரேம்குமார் said...
என்ன நவீன், கல்லூரி ஞாபகமா? ஒரே டெக்னில் கவிதையா பொழிந்து தள்ளிட்டீங்க‌ :-) //

வாங்க ப்ரேம் :)))
டெக்னிகலா?? அதெல்லாம் இல்லை சும்மா புதுதாக ஏதாவது எழுத போய் இப்படி ஆகிவிட்டது :))) நன்றி ப்ரேம் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தெரியாம வந்துட்டவன் said...
கண்ண கட்டுது சாமிகளா
உட்டுடுங்கப்பா..இந்த பொண்ணுகளையும் ..பொய்யையும்//

வாங்க :))))))) என்ன இப்படி நெந்துகொள்கிறீர்கள் ??:))) ஏன் என்ன ஆச்சு உங்களுக்கு ??:))) நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//vathilai murali said...
ரசித்தேன் //

வாங்க முரளி :)))
மிக்க நன்றி !!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
‘ மல்டி டாஸ்கிங்’ க்கு இப்படி ஒரு definition a! ada kadavule!!! //

வாங்க சுபா :)))
என்ன இதற்கே இப்படி மலைத்து போய்விட்டால் எப்படி. இன்னும் இப்படி பல விளக்கங்கள் இருக்கின்றன ;)))) நன்றி !

PPattian சொன்னது…

Simple but Super. எளியது ஆனால் அழகானது. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Azhkaaga irukirathu naveen !
-Raj

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// PPattian said...
Simple but Super. எளியது ஆனால் அழகானது. வாழ்த்துக்கள்//

வாருங்கள் பட்டியன் :))) மிக்க நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Azhkaaga irukirathu naveen !
-Raj //

வாங்க ராஜ் ! :))
மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

I love u Syam

BLUE HORSE சொன்னது…

உண்மையிலேயே அருமை!!! எபபி்டிப்பா உங்களால மட்டும் முடியுது!!! Classla உட்கார்ந்து உருப்படியா கவிடதை யாவது எழுதுனீங்களே அது வரைக்கும் சந்தோசம்!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
I love u Syam//

வாங்க யாருங்க இது?? யாருக்கு உங்க செய்தி ??;)))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Prasanna said...
உண்மையிலேயே அருமை!!! எபபி்டிப்பா உங்களால மட்டும் முடியுது!!! Classla உட்கார்ந்து உருப்படியா கவிடதை யாவது எழுதுனீங்களே அது வரைக்கும் சந்தோசம்!!!!//

வாங்க ப்ரசன்னா:)))
அட இதெல்லாம் இப்பொ எழுதினதுங்க . க்ளாஸ்ல கவனிச்சதை இப்போ தான் எழுத வாய்ப்பு கிடச்சது :))) மிக்க நன்றி :))

FunScribbler சொன்னது…

சூப்பரா இருக்கப்பா...

குசும்பன் சொன்னது…

மிக அருமையாக இருக்கு நவீன், படங்களும், கவிதைகளும்!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Thamizhmaagani said...
சூப்பரா இருக்கப்பா...//

வாங்க தமிழ்மாங்கனி :))
மிக்க நன்றி தமிழ்! அடிக்கடி வாருங்கள் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//குசும்பன் said...
மிக அருமையாக இருக்கு நவீன், படங்களும், கவிதைகளும்!!!//

வாங்க குசும்பன் :))
நன்றி குசும்பன் அருமையான வருகைக்கும் அழகான தருகைக்கும் :)))

Unknown சொன்னது…

your pictures are of apt choice for your kavithaigal.kavithaigalum un photovil irukkum models pol slim & sleek,great work pal.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//jagan said...
your pictures are of apt choice for your kavithaigal.kavithaigalum un photovil irukkum models pol slim & sleek,great work pal.//

வாங்க ஜெகன் :))
அட உங்க கமெண்ட் கூட ரொம்ப கவர்ச்சியா இருக்குதுங்க :))) மிக்க நன்றி ஜெகன் !

Divya சொன்னது…

\\\கெமிஸ்ட்ரி ‘லேப்’ பில்
இவள்தான் என உன்னை
நண்பர்கள் காட்டியபோதுதான்
உணர்ந்தேன்
நீ ஒரு தாவணி கட்டிய
‘ கோனிகல் ப்ளாஸ்க் ‘ என\\

ஹாஹா! அழகான ஒப்பீடு!!

Divya சொன்னது…

\\சொல்ல தயங்கி நீ
சொன்ன
‘ எனக்கு உன்னை
பிடிச்சிருக்கான்னு
தெரியலை! ‘
நீ சொன்னதிலேயே
அழகான பொய்
இதுதான் தெரியுமா ?\\

நல்லாயிருக்கு இவ்வரிகள்,
கவிதையும் படங்களின் தேர்வும் அபாரம்! வாழ்த்துக்கள்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\\கெமிஸ்ட்ரி ‘லேப்’ பில்
இவள்தான் என உன்னை
நண்பர்கள் காட்டியபோதுதான்
உணர்ந்தேன்
நீ ஒரு தாவணி கட்டிய
‘ கோனிகல் ப்ளாஸ்க் ‘ என\\

ஹாஹா! அழகான ஒப்பீடு!!//

வாங்க திவ்யா..:)))
மிக்க நன்றி ரசிப்புக்கு..:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\சொல்ல தயங்கி நீ
சொன்ன
‘ எனக்கு உன்னை
பிடிச்சிருக்கான்னு
தெரியலை! ‘
நீ சொன்னதிலேயே
அழகான பொய்
இதுதான் தெரியுமா ?\\

நல்லாயிருக்கு இவ்வரிகள்,
கவிதையும் படங்களின் தேர்வும் அபாரம்! வாழ்த்துக்கள்! //

வாங்க திவ்யா...:))
படங்களும் நல்லா இருக்கா..?? எல்லாம் உங்க ஆசீர்வாதம் :))) வாழ்த்துக்களுக்கு வருகைக்கும் மிக்க நன்றி !!!! :)))

நாடோடி இலக்கியன் சொன்னது…

‘ மல்டி டாஸ்கிங்’க்கு
நல்ல விளக்கம்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...
‘ மல்டி டாஸ்கிங்’க்கு
நல்ல விளக்கம்! //

வாங்க இலக்கியன் :)))
அப்படியா..?? :))) மிக்க நன்றி !!!

Naresh Kumar சொன்னது…

உண்மையைச் சொல்லனும்னா ‘ மல்டி டாஸ்கிங்’ க்கு அர்த்தம் உங்க கவிதையைப் படிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன்!

அதுசரி ஆஃபிஸ்ல கொடுக்கற மல்டி டாஸ்கிங் இந்தளவு சுவராசியமா ஏன் இருக்க மாட்டேங்குது?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Naresh Kumar said...
உண்மையைச் சொல்லனும்னா ‘ மல்டி டாஸ்கிங்’ க்கு அர்த்தம் உங்க கவிதையைப் படிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன்!

அதுசரி ஆஃபிஸ்ல கொடுக்கற மல்டி டாஸ்கிங் இந்தளவு சுவராசியமா ஏன் இருக்க மாட்டேங்குது? //

வாங்க நரேஷ்குமார் :))
இப்போதான் புரிஞ்சுதா..?? :))))
ஆஹா இப்படி சொல்லறீங்க..? :)))
மிக்க நன்றி நரேஷ் !! :))))