செவ்வாய், ஜனவரி 15, 2008

கொஞ்சலோ கொஞ்சல்..




ஓயாமல் நீ பேசிக்கொண்டே
இருப்பதாக ரொம்ப
பீற்றிக்கொள்ளாதே !!
பேசவே முடியாதபடி
உன் உதடுகளைக் களவாடி
விடும் திருட்டு உதடுகள்
என்னுடயவை...









உன்னை வெட்கப்படவைத்து
நான் படுத்தியெடுப்பதாக
அழகாக சலித்துக்கொள்கிறாய்
உன் வெட்கங்கள் என்னைப்
படுத்தும் பாடு உனக்கென்னடி
தெரியும் செல்ல குரங்கே









எப்பொழுதும் நான் தான்
கேட்கவேண்டுமா ?
ஏன் நீயாக கொடுக்க மாட்டாயா என
கேட்கிறாய்
நீ கேட்கும்போது
வழியும் உன் நாணக்குரல்
என்னையே வெட்கப்படுத்துவது
தெரியுமா..?











நல்ல பிள்ளையாகத்தான்
இருக்கின்றன
இந்த விரல்கள்
நீ அருகினில் வரும் வரை













ஏதோ ரகசியம் சொல்கிறேன்
என அருகினில்
அழைத்து நீ
செய்ததை
இனி ரகசியமாகத்தான்
வைக்கவேண்டும்
ச்ச்சீய் போடா...








இது தப்பில்லையா
என என் உதடுகள்
உன் உதட்டுக்குள்
கேட்டபோது
தப்புதான்
இப்படி கேட்பது
என்கிறாய்
ஹய்யோ போடா..










நம் பெயரை என் மார்பினில்
எழுதத்தான்
இவ்வளவு கூர்மையாக
நகங்கள் வளர்த்தாயாடி..?
நானும் எழுதட்டுமா என்றால்
மட்டும் இப்படி ஓடினால் எப்படி?






சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...








எங்கே ஒளித்துவைத்திருந்தாய்
இவ்வளவு காதலையும்
எனக்கேட்டால்
மனதினில் தான்
என சாதாரணமாகச்சொல்கிறாய்
இரு இரு அங்கே இன்னும்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாய்
என கண்டுபிடிக்கிறேன்








உன்னைக்
கொஞ்சும் வேலையை
என் உதடுகளுக்கும்
கெஞ்சும் வேலையை
என் விரல்களுக்கும்
கொடுத்துவிட்டு
நான் ரசிக்கும் வேலையை
மட்டும்தான்
செய்துகொண்டிருக்கிறேன்
திருப்தியாடி..?










பேசப் பேச வழியும்
உன் நாணங்களையும்
உன் மனதுக்குளிருந்து
எட்டி எட்டிப்பார்க்கும்
எனக்கான உன் காதலையும்
சேமித்துவை
என்னுடைய வரதட்சிணையே
அவைதான்...








என்னைக் காக்க வைத்த
ஒவ்வொரு நொடிக்கும்
சரமாரியாக
எங்கு வேண்டுமானாலும்
முத்தம் வழங்கும் தண்டனையை
உனக்கு
நிறைவேற்றப்போகிறேனடி...
தயாராக இரு








கொஞ்சிக் கொஞ்சியே
என்னிடம் காரியம் சாதிக்கிறாய்
என குற்றம் சுமத்தாதே
உன் தாய்க்குப்பின் உன்னை
நெஞ்சினில் சுமக்கும்
என் காதல் குழந்தையை
நான் கொஞ்சாமல்
வேறு யார் கொஞ்சுவார்கள்







ஏன் இப்படி இருக்கிறேன்..?
உன்னைக் காதலித்தபின்
வேறு பெண்களே என்
கண்களுக்கு தெரியவில்லையே..
என்னடி செய்தாய் ..?







மார்போடு என்னை
சேர்த்தணைத்தபோது
ஒரு தாய் போல
உணர்ந்தேன் உன்னை
தெரியுமாடி..?








நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

46 கருத்துகள்:

Divya சொன்னது…

Asusuall very nice 'konjal kaadhal kavithai'!!
But cud sense more romance in this kavithai.

\\
நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது\\

Very touching lines. Exlnt Naveen Prakash.

Divya சொன்னது…

\\இது தப்பில்லையா
என என் உதடுகள்
உன் உதட்டுக்குள்
கேட்டபோது
தப்புதான்
இப்படி கேட்பது
என்கிறாய்
ஹய்யோ போடா..\\

Boundless imagination! attagasam!!!

ILA (a) இளா சொன்னது…

பொங்கல் திருநாளுக்கு
தள்ளுபடியில்லாமல்
ஒரு கவிதைக் கரும்பு..
சுவையோ சுவை..

Divya சொன்னது…

\\சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...\\

Top of your romantic thoughts!
romba nalla iruku intha lines.Superb!!

சேதுக்கரசி சொன்னது…

நல்லாருக்கு... ஆமா, அந்த மூணாவது படத்துல இருக்குற பொண்ணு நம்ம ஊர்ப் பொண்ணு மாதிரி இருக்குதே? :-D

Dreamzz சொன்னது…

காதல் ஒரு அழகான பொய்! கவிதை அதின் அழகான மிகைபடுத்தலோ ;)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
Asusuall very nice 'konjal kaadhal kavithai'!!
But cud sense more romance in this kavithai.

\\
நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது\\

Very touching lines. Exlnt Naveen Prakash.//

வாங்க திவ்யா :))
ரொம்ப டச்சிங் உங்க கமெண்ட்டும் தாங்க !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\இது தப்பில்லையா
என என் உதடுகள்
உன் உதட்டுக்குள்
கேட்டபோது
தப்புதான்
இப்படி கேட்பது
என்கிறாய்
ஹய்யோ போடா..\\

Boundless imagination! attagasam!!!//

எல்லையில்லா கற்பனையெல்லாம் இல்லீங்க... சும்மா தான்.. :))) நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA(a)இளா said...
பொங்கல் திருநாளுக்கு
தள்ளுபடியில்லாமல்
ஒரு கவிதைக் கரும்பு..
சுவையோ சுவை..//

வாங்க இளா :)))
நீண்ட நாட்களுக்குப்பின் இளா என் கவிதைகளில்.. மிக்க மகிழ்ச்சி இளா.. கவிச்சுவையை சுவைத்ததற்கு.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...\\

Top of your romantic thoughts!
romba nalla iruku intha lines.Superb!! //

வாங்க திவ்யா :))
இப்படியெல்லாம் சொல்லாதீங்க.... எனக்கு வெட்கமா இருக்கு :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சேதுக்கரசி said...
நல்லாருக்கு... ஆமா, அந்த மூணாவது படத்துல இருக்குற பொண்ணு நம்ம ஊர்ப் பொண்ணு மாதிரி இருக்குதே? :-D //

வாங்க சேதுக்கரசி :)))
எப்படி இருக்கிறீர்கள் ?? அட ஆமாங்க அந்தப்பொண்ணு நம்ம ஊரு மாதிரிதான் தெரியுதுல்ல..?? :))))

இம்சை அரசி சொன்னது…

எல்லாமே அட்டகாசமா இருக்கு நவீன்.

// நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

//

இதுதான் இருக்கறதுலயே ரொம்ப சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சது :)))

பொங்கல் வாழ்த்துக்கள் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Dreamzz said...
காதல் ஒரு அழகான பொய்! கவிதை அதின் அழகான மிகைபடுத்தலோ ;)//

வாருங்கள் ட்ரீம்ஸ் :)))
காதலில் சில அழகான பொய் இருக்கலாம் காதலே பொய்யாக இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து :))))

மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும் !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இம்சை அரசி said...
எல்லாமே அட்டகாசமா இருக்கு நவீன்.//

வாங்க இம்சை அரசி :)))
ஆஹா அப்படியா ??:)))) மிக்க மகிழ்ச்சி !!!!

// நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

//

இதுதான் இருக்கறதுலயே ரொம்ப சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சது :)))

பொங்கல் வாழ்த்துக்கள் :)))//

அட உங்களுக்கும் அதுதான் மிகவும் பிடித்ததா...??:))))

உங்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!! :))))

ஸ்ரீ சொன்னது…

அழகு தான் கவிதைகள் என்றாலும் முந்தைய பதிவுகளை விட ஏதோ ஒன்று குறைகிறது ஆனால் எதுவென தெரியவில்லை. மனதில் பட்டது வார்த்தைகளாம் No offence meant :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
நல்ல பிள்ளையாகத்தான்
இருக்கின்றன
இந்த விரல்கள்
நீ அருகினில் வரும் வரை
//

:)) வேறென்ன சொல்ல!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
மார்போடு என்னை
சேர்த்தணைத்தபோது
ஒரு தாய் போல
உணர்ந்தேன் உன்னை
தெரியுமாடி..?
//
அழகு!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
உன்னைக்
கொஞ்சும் வேலையை
என் உதடுகளுக்கும்
கெஞ்சும் வேலையை
என் விரல்களுக்கும்
கொடுத்துவிட்டு
நான் ரசிக்கும் வேலையை
மட்டும்தான்
செய்துகொண்டிருக்கிறேன்
திருப்தியாடி..?
//
திருப்தி :))

cheena (சீனா) சொன்னது…

//நம் பெயரை என் மார்பினில்
எழுதத்தான்
இவ்வளவு கூர்மையாக
நகங்கள் வளர்த்தாயாடி..?
நானும் எழுதட்டுமா என்றால்
மட்டும் இப்படி ஓடினால் எப்படி?//

காதல் குறும்புகள் அதிகம் - படங்கள் அருமை.

cheena (சீனா) சொன்னது…

//சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...//

காதலின் உச்சமே இது தான் - படங்களுக்கேற்ற வரிகள்.

cheena (சீனா) சொன்னது…

//பேசப் பேச வழியும்
உன் நாணங்களையும்
உன் மனதுக்குளிருந்து
எட்டி எட்டிப்பார்க்கும்
எனக்கான உன் காதலையும்
சேமித்துவை
என்னுடைய வரதட்சிணையே
அவைதான்...//

வரதட்சினை வாங்குவதோ கொடுப்பதோ தவறு. இருப்பினும் ரசிக்கலாம்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஸ்ரீ said...
அழகு தான் கவிதைகள் என்றாலும் முந்தைய பதிவுகளை விட ஏதோ ஒன்று குறைகிறது ஆனால் எதுவென தெரியவில்லை. மனதில் பட்டது வார்த்தைகளாம் No offence meant :)//

வாங்க ஸ்ரீ :))
மிக்க நன்றி !! :))
என்ன குறைகிறது ஸ்ரீ ?? கொஞ்சம் சொல்லுங்களேன்.. எனக்கு எதுவென தெரியவில்லை !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//
நல்ல பிள்ளையாகத்தான்
இருக்கின்றன
இந்த விரல்கள்
நீ அருகினில் வரும் வரை
//

:)) வேறென்ன சொல்ல!//

வாங்க சதீஷ் :))
சொல்ல முடியுமா என்ன ? ;)))) நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//
மார்போடு என்னை
சேர்த்தணைத்தபோது
ஒரு தாய் போல
உணர்ந்தேன் உன்னை
தெரியுமாடி..?
//
அழகு!//


//sathish said...
//
உன்னைக்
கொஞ்சும் வேலையை
என் உதடுகளுக்கும்
கெஞ்சும் வேலையை
என் விரல்களுக்கும்
கொடுத்துவிட்டு
நான் ரசிக்கும் வேலையை
மட்டும்தான்
செய்துகொண்டிருக்கிறேன்
திருப்தியாடி..?
//
திருப்தி :)) //

அஹா சதீஷ்
மிக அழகாக ஒற்றை வரியில் கவிதையான விமர்சனம் !! ரசித்தேன் !! மிக்க நன்றி வருகைகும்.. திருப்தியான தருகைக்கும் !! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//cheena (சீனா) said...
//நம் பெயரை என் மார்பினில்
எழுதத்தான்
இவ்வளவு கூர்மையாக
நகங்கள் வளர்த்தாயாடி..?
நானும் எழுதட்டுமா என்றால்
மட்டும் இப்படி ஓடினால் எப்படி?//

காதல் குறும்புகள் அதிகம் - படங்கள் அருமை.//

வாருங்கள் சீனா சார் :)))
குறுப்புகள் இருந்தால் தானே காதலே இனிக்கும் ?? :))))) மிக்க நன்றி !!!

பெயரில்லா சொன்னது…

ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு கொஞ்சி படுத்துரீங்க.

வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

நவீன்... வழக்கம் போல கலக்கல்.
நம்ம டைரக்டர் பேரரசு பாணில சொல்லணும்ன்னா "இது ஒரு காதல் பஞ்சாமிர்தம்" :)

தொடரட்டும்
உங்கள்
காதல் சில்மிஷங்களும்,
கவிதை சொல்மிஷங்களும்.

பெயரில்லா சொன்னது…

//நல்லாருக்கு... ஆமா, அந்த மூணாவது படத்துல இருக்குற பொண்ணு நம்ம ஊர்ப் பொண்ணு மாதிரி இருக்குதே?//

சேது.., பையன் நவீன் மாதிரி இல்லாத வரைக்கும் பிரச்சனை இல்லை (அவர் வீட்ல ) :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//cheena (சீனா) said...
//சமையல் அறைக்கெல்லாம்
வராதே என நீ சொன்ன
பின்புதான் தெரிந்தது
அங்கே அணைக்க வேண்டியது
அடுப்பை மட்டும் அல்ல
என்று...//

காதலின் உச்சமே இது தான் - படங்களுக்கேற்ற வரிகள்.//

வாங்க சீனா சார் :)))
அழகுதான்.. :)) மிக்க நன்றி !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//cheena (சீனா) said...
//பேசப் பேச வழியும்
உன் நாணங்களையும்
உன் மனதுக்குளிருந்து
எட்டி எட்டிப்பார்க்கும்
எனக்கான உன் காதலையும்
சேமித்துவை
என்னுடைய வரதட்சிணையே
அவைதான்...//

வரதட்சினை வாங்குவதோ கொடுப்பதோ தவறு. இருப்பினும் ரசிக்கலாம்.//

சீனா சார் :))
அட என்ன நீங்க... இப்படியெல்லாம் தட்சிணை கிடைத்தால் வரம் தானே !! :)))) அதுதான் வரதட்சிணை :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Anonymous said...
ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு கொஞ்சி படுத்துரீங்க.

வாழ்த்துக்கள்.//

வாங்க அனானி :))
அஹா நியாயமான கொஞ்சல் தானே.. அநியாகமாகவா இருக்கு..?? ;)))) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!! பெயரையும் விட்டுப்போய் இருக்கலாமே..? !! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேவியர் said...
நவீன்... வழக்கம் போல கலக்கல்.
நம்ம டைரக்டர் பேரரசு பாணில சொல்லணும்ன்னா "இது ஒரு காதல் பஞ்சாமிர்தம்" :)//

வாருங்கள் சேவியர் :)))
எப்படி இருக்கிறீர்கள் ??

ஆஹா காதல் பஞ்சாமிர்தமா ?? :))))
மிகவும் சுவையாக இருக்கிறது தங்களின் சொல்லாடல் !!! மிக ரசித்தேன் !!

//தொடரட்டும்
உங்கள்
காதல் சில்மிஷங்களும்,
கவிதை சொல்மிஷங்களும்.//

சேவியர் எப்படி இப்படியெல்லாம் சொற்களை பூக்கவைக்கிறீர்கள் ?? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.. :)))
" சொல்மிஷ்ங்கள் " - அழகோ அழகு !!

மிக்க நன்றி சேவியர் !!

இராம்/Raam சொன்னது…

நவீன்,

வழக்கம் போல் அட்டகாசம்.... :)

எழில்பாரதி சொன்னது…

கொஞ்சல்கள் அருமை.........


நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

அருமையான வரிகள்......

எல்லோருக்கும் பொங்கல் விடுமுறை விட்டா உங்களுக்கு மட்டும் கொஞ்சல்களுக்காக‌

விட்டிருக்காங்க........

தொடரட்டும் உங்கள் கொஞ்சல்கள்!!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...
நவீன்,

வழக்கம் போல் அட்டகாசம்.... :)//

வாங்க ராம் :))
மிக்க நன்றி !!! :)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழ்த்தம்பி said...
கொஞ்சல்கள் அருமை.........
//
வாங்க தமிழ் :))))
மிக்க நன்றி !! :))


//நான் ஏன்
உன் மனைவியாக
வரவேண்டும்
என நீ
கேட்பது
ஏன்
உனக்கு மூச்சு வேண்டும்
எனக் கேட்பதுபோல்
இருக்கிறது

அருமையான வரிகள்......

எல்லோருக்கும் பொங்கல் விடுமுறை விட்டா உங்களுக்கு மட்டும் கொஞ்சல்களுக்காக‌

விட்டிருக்காங்க........//

ஹஹஹஹ அப்படியெல்லாம் இல்லீங்க !!! :))

//தொடரட்டும் உங்கள் கொஞ்சல்கள்!!!!!//

கண்டிப்பாக.... :)))

இளைய கவி சொன்னது…

ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊட்டியமைக்கு மிக்க நன்றி. யாரிங்கே இந்த கவிக்கு தக்க சன்மானம் அளித்து நமது சபையின் ஆஸ்தான கவியாக பட்டம் அளியுங்கள்.

என்றும் அன்புடன்
இளையகவி

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இளைய கவி said...
ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊட்டியமைக்கு மிக்க நன்றி. யாரிங்கே இந்த கவிக்கு தக்க சன்மானம் அளித்து நமது சபையின் ஆஸ்தான கவியாக பட்டம் அளியுங்கள்.

என்றும் அன்புடன்
இளையகவி//

வாங்க இளையகவி :)))
அட நீங்க அரசரா ?? தெரியவே இல்லையே !!! சீக்கிரம் சன்மானம் அனுப்புங்கள் இளையகவி !!!! :))))

மிக்க நன்றி ! :))

இளைய கவி சொன்னது…

எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பரிசு உமக்கு முன்பே அளிக்கப்பட்டுவிட்டது கவிஞரே( எனது மந்திரியின் தகவல் படி ).

என்றும் அன்புடன்
இளையகவி

நிவிஷா..... சொன்னது…

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதைகள் nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இளைய கவி said...
எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பரிசு உமக்கு முன்பே அளிக்கப்பட்டுவிட்டது கவிஞரே( எனது மந்திரியின் தகவல் படி ).

என்றும் அன்புடன்
இளையகவி//

ஆஹா அப்படியா சேதி..?? மிக்க நன்றி !! மந்திரியார் எங்கே...?? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நிவிஷா..... said...
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதைகள் nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா//

வாருங்கள் நிவிஷா :)))
வித்தியாசமான பெயர் ! :)) மிக்க நன்றி !!! நிச்சயம் வருகிறேன் :)))

Sophia சொன்னது…

Inru than mudhal mudhalai parthen inthe kavithai sarathai

Really nice...
Rombave superb...
Unarchi purvamana kavithai anaithum...
Innum pala kavithaigal ithai pol ethir parkiren

Natupudan,
Sophia Kani

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sophia said...
Inru than mudhal mudhalai parthen inthe kavithai sarathai

Really nice...
Rombave superb...
Unarchi purvamana kavithai anaithum...
Innum pala kavithaigal ithai pol ethir parkiren

Natupudan,
Sophia Kani//

வாங்க சோபியா :))

முதன் முறையாக வருகிறீர்களா..?? :))
மிக்க மகிழ்ச்சி !! இன்னும் பல கவிதைகளா... ம்ம்ம்... கண்டிப்பாக...
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !!! :))

ரசிகன் சொன்னது…

//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

சூப்பரேய்ய்ய்ய்ய்ய்:))))
ரொம்பவே ரசித்தேனுங்க நவின்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ரசிகன் said...
//அப்படி முறைக்காதேடி...
நிஜமாகவே ரகசியம்
சொல்லத்தான்
கூப்பிட்டேன்..
காதுக்குள் நிற்க
இடமில்லாமல்
தானாகவே வழுக்கி
கன்னத்தில்
விழுந்துவிட்டன என்
இதழ்கள்//

சூப்பரேய்ய்ய்ய்ய்ய்:))))
ரொம்பவே ரசித்தேனுங்க நவின்.//

வாங்க ரசிகன் :)))
அட்டகாசமான விமர்சனம் :))) மிக்க நன்றி !!!!