திங்கள், ஜூன் 23, 2008

வெட்கம் என்ன நிறம்...?






நான் கலராகி விட்டேனா
எனக் கேட்கிறாய்
நீ எந்தக் கலராக
இருந்தாலும்
எனக்குப் பிடித்த
கலர் நீதானே..?







ஏன் நான் நிறம்
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?





சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?





என் நிறமே எனக்குப்
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...






இந்த சேலை
உன் நிறத்துக்கு
ஒத்துவருமா என
என்ன சந்தேகம்
உனக்கு..?
எந்த சேலை
கட்டினாலும்
நீ சேலை
கட்டிய சிலை
போல் இருக்கிறாய்
தெரியுமா..?





இப்படி உன் நிறம்
பற்றி ஏணடி அடிக்கடி
கவலைப் படுகிறாய்..?
விக்ரகம்
தங்கமாயிருந்தாலென்ன..?
கல்லாய் இருந்தாலென்ன..?





என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...





எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..





வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான

உன்
உள்ளமே அழகு...





85 கருத்துகள்:

எழில்பாரதி சொன்னது…

அருமையான கவிதைகள்!!!!!

எழில்பாரதி சொன்னது…

//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?//

அருமை உண்மையும் கூட

எழில்பாரதி சொன்னது…

//என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...//

அழகு... உங்களுக்கு பூனைக்குட்டி ரொம்ப பிடிக்குமோ!!!

எழில்பாரதி சொன்னது…

//எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..//

இது ரொம்ப அழகா இருக்கு!!!

எழில்பாரதி சொன்னது…

//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான


உன்
உள்ளமே அழகு...//


மிக உண்மை உள்ளம் அழகாய் இருந்துவிட்டால் வேறு அழகே வேண்டாம்!!!

Aruna சொன்னது…

வழக்கம் போல ரொம்ப நல்லாருக்கு!!!
அன்புடன் அருணா

இவன் சொன்னது…

இந்த முறை theme நிறமா?? கலக்கல் கவிதைகள் கவிஞரே.....

இவன் சொன்னது…

me the first???

இராம்/Raam சொன்னது…

/
வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு.../

அருமை நவீன்....

Info Sec சொன்னது…

Very Nice Poem Naveen...I liked it very much...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

வெட்கம் என்ன நிறம் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

படங்கள் எல்லாமே கறுப்பழகிகள்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///என் நிறமே எனக்குப்
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...///

பிடித்தது நிறம் மட்டும்தானா கவிஞரே...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

///வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...///

இதுதான் அழகான நிறம்...

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?
//

அருமையான வரிகள்.உண்மையைச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

ரொம்ப ரொம்ப அழகான கவிதைகள்...!! :-)

FunScribbler சொன்னது…

கவிதையின் theme சூப்பர்ர்ர்!

//என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...//

நல்லா இருக்குதுப்பா! அழகான தொகுப்பு! வழக்கம் போல் கலக்கல் தான்.. கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடலை மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள். நன்றி:))

மங்களூர் சிவா சொன்னது…

/
வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான

உன்
உள்ளமே அழகு..
/

சூப்பரப்பு

மங்களூர் சிவா சொன்னது…

வெட்கம் என்ன நிறம் நவீன் அண்ணே!?!?

மங்களூர் சிவா சொன்னது…

/
படங்கள் எல்லாமே
கறுப்பழகிகள்
/

எதும் மெசேஜா எங்களுக்கு!?!?

:)))))))))))

மங்களூர் சிவா சொன்னது…

/

பிடித்தது நிறம் மட்டும்தானா கவிஞரே...
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...
அருமையான கவிதைகள்!!!!! //

வாங்க எழில்..:))
மிக்க நன்றி... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...
//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?//

அருமை உண்மையும் கூட //

உண்மைதான் எழில்...
ஆனால் இது எத்தனை பேருக்குத்தெரியும்..?? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...
//என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...//

அழகு... உங்களுக்கு பூனைக்குட்டி ரொம்ப பிடிக்குமோ!!! //

ஆமாம் எழில்.. எனக்குப் பூனைக்குட்டிகள் மட்டும் அல்ல... செல்லப் பிராணிகள் எல்லாமே பிடிக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில்பாரதி said...
//எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..//

இது ரொம்ப அழகா இருக்கு!!! //

அப்படியா..? :))

மிக்க நன்றி... :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// எழில்பாரதி said...
//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான


உன்
உள்ளமே அழகு...//


மிக உண்மை உள்ளம் அழகாய் இருந்துவிட்டால் வேறு அழகே வேண்டாம்!!! //

எழில்...:))
அழகான வருகைக்கும்.. மிக அழகான தருகைக்கும் மிக்க நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Aruna said...
வழக்கம் போல ரொம்ப நல்லாருக்கு!!!
அன்புடன் அருணா //

வாருங்கள் அருணா..:))
வருகையும் தருகையும் ரொம்ப நல்லா இருக்கு...:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இவன் said...
இந்த முறை theme நிறமா?? கலக்கல் கவிதைகள் கவிஞரே..... //

வாருங்கள் இவன்..:)))
ஆம்... நிறம் தரம் நிர்ணயிப்பது தகுமோ..? :)))

நன்றி...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இவன் said...
me the first??? //

முதலில் வந்தால் என்ன? முடிவில் வந்தால் என்ன? முத்தான உங்கள் பின்னூட்டம்... ?? ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம்/Raam said...

/வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு.../

அருமை நவீன்.... //

வாருங்கள் ராம் :)))
மிக்க மகிழ்ச்சி... அழகான பின்னூட்டமும்.. தவறாத தங்கள் வருகையும்... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//subha said...
Very Nice Poem Naveen...I liked it very much... //

வாருங்கள் சுபா..:))

மிகப் பிடித்ததா..? :))
மிக்க நன்றி... வருகைக்கும் தருகைக்கும்..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
வெட்கம் என்ன நிறம் அண்ணன்... //

வாருங்கள் தமிழன்... :)))
வெட்கத்துக்கு ஏது நிறம்..??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
படங்கள் எல்லாமே கறுப்பழகிகள் //

ஆம்.. :)) காந்தல் அழகு.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தமிழன்... said...
///என் நிறமே எனக்குப்
பிடிக்கவில்லை
என அடிக்கடி
அழகாகக் குறைபட்டுக்
கொள்கிறாய்
எனக்குப் பிடித்ததே
உன் நிறம் தான்
என உணராமல்...///

பிடித்தது நிறம் மட்டும்தானா கவிஞரே... //

வாங்க தமிழன்... :)))
அஹா என்ன இப்படி என்னை கேட்கறீங்களே.... கவிதை தான் இது...சரியா..? ;))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//தமிழன்... said...
///வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...///

இதுதான் அழகான நிறம்... //

ஆம் தமிழ்... :))

அழகான வருகைக்கும்.... மிக குறும்பான தருகைக்கும் நன்றி.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//இறக்குவானை நிர்ஷன் said...
//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?
//

அருமையான வரிகள்.உண்மையைச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். //

வாருங்கள் நிர்ஷன்...:)))
அப்படியா ?? :)))
மிக்க நன்றி... அளித்த எண்ணங்களுக்கும்.. எழுத்துக்களுக்கும்... :)))

பெயரில்லா சொன்னது…

Nice Theme.. Nice Poem..

-S H A N K ii

பெயரில்லா சொன்னது…

கடைசி வரை வெட்கத்தின் color ah சொல்லவே இல்லை போங்க boss.ipadi emathitingale

MSK / Saravana சொன்னது…

"இப்படி உன் நிறம்
பற்றி ஏணடி அடிக்கடி
கவலைப் படுகிறாய்..?
விக்ரகம்
தங்கமாயிருந்தாலென்ன..?
கல்லாய் இருந்தாலென்ன..?"

"வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு..."

இந்த இரண்டும் கலக்கல் கவிதைகள்..
அழகு..
:)

நாமக்கல் சிபி சொன்னது…

்ம் மேட்டர் புரிகிறது நவீன்பிரகாஷ்!

வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

Thala kavidhai ellam azhaga irukku. Andha vigragam kavidhai Superu superu................

பெயரில்லா சொன்னது…

வெட்கம்
வெட்கப்பட்டதை நினைத்து நினைத்து
மறுபடி வெட்கப்பட மாட்டோமா
எண்று வெட்கப்பட வைக்கும் வெட்கம் ;
வெட்கம் காதலுக்கு உரம் !

Divya சொன்னது…

அருமையான கவிதை,
மிக அழகான கருத்துடன், வாழ்த்துக்கள்!!

Divya சொன்னது…

\\சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?\\

பெண்ணிற்கு,
பொன்'நகை' கொடுக்காத அழகை
புன்னகை கொடுக்கும்:))

Divya சொன்னது…

\எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..\\

ரசிக்கும்படியான வரிகள், அழகு:)))

Divya சொன்னது…

\\வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...\\

'வெள்ளந்தி'--- > அற்புதமான வார்த்தை பிரயோகம்!!!
பாராட்டுக்கள் கவிஞரே:))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...//

கலக்கல் :)

Divyapriya சொன்னது…

//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான


உன்
உள்ளமே அழகு...//
WOW!!!

ரசிகன் சொன்னது…

//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?//

இது சூப்பரு:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Sri said...
ரொம்ப ரொம்ப அழகான கவிதைகள்...!! :-) //

வாருங்கள் ஸ்ரீ...:))
முதன் வரவுக்கும் முதல் தரமான தரவுக்கும் மிக்க நன்றி :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Thamizhmaangani said...
கவிதையின் theme சூப்பர்ர்ர்!

//என் நிறம்
யாருக்குப் பிடிக்கும்
எனக் கேட்கிறாய்...
எந்த நிறமாக இருந்தாலும்
அள்ளிக்
கொஞ்சத் தூண்டும்
என் செல்லப்
பூனைக்குட்டி நீ...//

நல்லா இருக்குதுப்பா! அழகான தொகுப்பு! வழக்கம் போல் கலக்கல் தான்.. கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடலை மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள். நன்றி:)) //

வாங்க தமிழ்...:))
மிக்க நன்றி தமிழ்... அட உங்களுக்கு அந்தப்பாடல் ஞாபகம் வந்துடுச்சா..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/
வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான

உன்
உள்ளமே அழகு..
/

சூப்பரப்பு //

வாங்க சிவா..:))
மிக்க நன்றி.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
வெட்கம் என்ன நிறம் நவீன் அண்ணே!?!? //

சிவா.. :))))
வெட்கப்படும் பெண் எந்நிறமாக இருந்தாலும் அழகு தானே...?!! அப்புறம் என்ன..? :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மங்களூர் சிவா said...
/
படங்கள் எல்லாமே
கறுப்பழகிகள்
/

எதும் மெசேஜா எங்களுக்கு!?!?

:))))))))))) //

அட மெசேஜ் எல்லாம் ஒண்ணுமே இல்லீங்கோ... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மங்களூர் சிவா said...
/

பிடித்தது நிறம் மட்டும்தானா கவிஞரே...
/

ரிப்பீட்டேய்ய்ய்ய் //

நிறம்..
தரமல்ல....
சரியா..?

:)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Nice Theme.. Nice Poem..

-S H A N K ii //

வாங்க ஷங்கி :)))
மிக்க நன்றி அழகான வருகைக்கும்... தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கடைசி வரை வெட்கத்தின் color ah சொல்லவே இல்லை போங்க boss.ipadi emathitingale //

அட என்ன இப்படி கோச்சுகிட்டா எப்படி..?? :)))

வெட்கத்துக்கு நிறம் ஏது....?? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//M.SARAVANA KUMAR said...
"இப்படி உன் நிறம்
பற்றி ஏணடி அடிக்கடி
கவலைப் படுகிறாய்..?
விக்ரகம்
தங்கமாயிருந்தாலென்ன..?
கல்லாய் இருந்தாலென்ன..?"

"வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு..."

இந்த இரண்டும் கலக்கல் கவிதைகள்..
அழகு..
:) //

வாருங்கள் சரவணகுமார்...:)))

கலக்கலானது கவிதை மட்டுமல்ல தங்கள் வருகையும்.. தருகையும் தான்..:)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
்ம் மேட்டர் புரிகிறது நவீன்பிரகாஷ்!

வாழ்த்துக்கள்! //

வாங்க சிபி..:))

அட உங்களுக்கு ஏதோ புரிகிறது போல இருக்கே... எனக்கும் சொல்லிட்டு போனால் பரவாயில்லை... :))))))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஸ்ரீ said...
Thala kavidhai ellam azhaga irukku. Andha vigragam kavidhai Superu superu..... //

வாங்க ஸ்ரீ.. :))))

விக்ரகம் கவிதை பிடித்ததா கவிஞரே..? என் பாக்கியம்.....
மிக்க நன்றி ..:))))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஈர வெங்காயம் said...
வெட்கம்
வெட்கப்பட்டதை நினைத்து நினைத்து
மறுபடி வெட்கப்பட மாட்டோமா
எண்று வெட்கப்பட வைக்கும் வெட்கம் ;
வெட்கம் காதலுக்கு உரம் ! //

வாங்க ஈரம்.. :))
மிகச்சரியாகச் சொன்னீர்கள்... மிக்க நன்றி...வருகைக்கும் தருகைக்கும்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
அருமையான கவிதை,
மிக அழகான கருத்துடன், வாழ்த்துக்கள்!! //

வாங்க திவ்யா.. :))
அழகான வருகை... மிக அழகான தருகை.. நன்றி.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?\\

பெண்ணிற்கு,
பொன்'நகை' கொடுக்காத அழகை
புன்னகை கொடுக்கும்:)) //

அட பொன் நகை கொடுக்காது
புன்னகை அழகு !!!

அருமை... அருமை... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\எந்த நிறமாக
இருந்தாலும்
உன் வெட்கங்கள்
எல்லாமே
எனக்குப்
பிடித்த
நிறம் தானடி
என் செல்லமே..\\

ரசிக்கும்படியான வரிகள், அழகு:))) //

தங்கள் ரசிப்பு என் பாக்கியம் !!! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...\\

'வெள்ளந்தி'--- > அற்புதமான வார்த்தை பிரயோகம்!!!
பாராட்டுக்கள் கவிஞரே:)) //

:)) வெள்ளந்தியாக இருந்துவிட்டால் வாழ்க்கையே அழகுதான் இல்லையா..? :))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//sathish said...
//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான
உன்
உள்ளமே அழகு...//

கலக்கல் :) //

வாருங்கள் சதீஷ்... :))
மிக்க நன்றி வாசிப்புக்கும் ரசிப்புக்கும்... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divyapriya said...
//வெள்ளையான
நிறமா அழகு..?
இல்லையடி
என் செல்லமே..
வெள்ளந்தியான


உன்
உள்ளமே அழகு...//
WOW!!! //

வாருங்கள் திவ்யப்ரியா..:))
முதன் வருகைக்கு மிக்க நன்றி.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ரசிகன் said...
//சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?//

இது சூப்பரு:) //

வாருங்கள் ரசிகன்.. :))
நன்றி... சூப்பரான தருகைக்கு... :))

புகழன் சொன்னது…

கருப்பல்லாத நீக்ரோ பெண்களின் போட்டோக்களை எங்கிருந்து எடுத்தீர்கள்?
அத்தனை கொள்ளை அழகு

தினேஷ் சொன்னது…

கறுப்பூம் அழுகு கவிதையும் அழுகு...

தினேஷ்

பெயரில்லா சொன்னது…

your poem said,more meanings.
present people are thinking, out of beauty is beauty...
very good.....!
please visit my site...
http://sivanaathan.blogspot.com/
சிவநாதன்

Ramya Ramani சொன்னது…

மிக அற்புதமான,அழகான கவிதைகள்..பாராட்ட வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை

Ramya Ramani சொன்னது…

\\சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?
\\

அருமை :)

Selva Kumar சொன்னது…

அருமையான கவிதைகள் நவீன்.!!

//ஏன் நான் நிறம்
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?//

அட ஆமாங்க..வெள்ளையா இருந்தா நிறம் கம்மிதானே ???

புதுமையான சிந்தனை..

Selva Kumar சொன்னது…

உங்க பதிவு layout மிகவும் அழகாய் இருக்குங்க...:)))

வாழ்த்துக்கள்....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// புகழன் said...

கருப்பல்லாத நீக்ரோ பெண்களின் போட்டோக்களை எங்கிருந்து எடுத்தீர்கள்?
அத்தனை கொள்ளை அழகு //

வாருங்கள் புகழன்.. :)))

எல்லாம் வலையில் பிடித்த மீன்கள் தான் ..:)))

மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தினேஷ் said...

கறுப்பபும் அழகு கவிதையும் அழகு...

தினேஷ் //

வாருங்கள் தினேஷ்..:)))
அழகானவைகளில் தங்கள் வருகையும் இனி... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சிவநாதன் said...

your poem said,more meanings.
present people are thinking, out of beauty is beauty...
very good.....!
please visit my site...
http://sivanaathan.blogspot.com/
சிவநாதன் //

வாருங்கள் சிவநாதன்..:))
மிக்க மகிழ்ச்சி தங்களின் முதன் வருகைக்கும் அழகான தருகைக்கும்...

கண்டிப்பாக வருகிறேன்.. :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Ramya Ramani said...

மிக அற்புதமான,அழகான கவிதைகள்..பாராட்ட வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை //

வாருங்கள் ரம்யா.. :)))
வார்த்தைகள் ஒளிந்து கொண்டனவா..?? :)))

மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகை... :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Ramya Ramani said...

\\சிகப்பாக
இல்லையே என
கவலைப் படாதேடி
எந்தச் சிகப்பழகும்
கொடுக்காத அழகை
உன் சிரிப்பழகு
கொடுக்கிறது
தெரியுமாடி..?
\\

அருமை :) //

அருமை வருகையும் கூட... மிக்க நன்றி ரம்யா.. :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வழிப்போக்கன் said...

அருமையான கவிதைகள் நவீன்.!!

//ஏன் நான் நிறம்
குறைவாகப் பிறந்தேன்
ஏனடி அடிக்கடி
சலித்துக்கொள்கிறாய் ?
உன் நிறையே
உன் நிறம் தான்...
உணர்வாயா..?//

அட ஆமாங்க..வெள்ளையா இருந்தா நிறம் கம்மிதானே ???

புதுமையான சிந்தனை.. //

வாருங்கள் வழிப்போக்கன்... :)))

அட உங்கள் சிந்தனை கூட புதுமையாக இருக்கிறதே... :)))

மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))

தேவன் மாயம் சொன்னது…

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

A N A N T H E N சொன்னது…

கவிதையும் கருப்பழகிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அழகாய் இருக்க....நான் என்ன சொல்லிட பேறேன்??

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// thevanmayam said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com. //

வாருங்கள் தேவா.. :))
கண்டிப்பாக வருகிறேன்... !!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// A N A N T H E N said...

கவிதையும் கருப்பழகிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அழகாய் இருக்க....நான் என்ன சொல்லிட பேறேன்?? //

வாருங்கள் ஆனந்தன்... :)))

சொல்லவே வேண்டாம்... வருகையே மிக அழகாக இருக்கிறது ஆனந்தன்... மிக்க நன்றி... :)))