பூங்குழலி ஆரணங்கு
தேன்வடியும் பூவதரம்
தீஞ்சுவைக்கவில்லையடி
தெவிட்டாத
தேனமுதே !
நான் சுவைக்க
வந்தருகில்
இழுத்தணைத்து
வைத்துவிடு
நாணமென்ன
நீ மொழிவாய்
ஆதவனை
தூங்கச்சொல்வேன்
தேன்வடியும் பூவதரம்
தீஞ்சுவைக்கவில்லையடி
தெவிட்டாத
தேனமுதே !
நான் சுவைக்க
வந்தருகில்
இழுத்தணைத்து
வைத்துவிடு
நாணமென்ன
நீ மொழிவாய்
ஆதவனை
தூங்கச்சொல்வேன்
கொல்லும்
விழியிரண்டை
இழுத்தணைக்கும்
விழியிரண்டை
இழுத்தணைக்கும்
இமைகளென
நித்தம் தழுவிடுவேன்
மூழ்கி
நித்தம் தழுவிடுவேன்
மூழ்கி
முத்தமெடுப்பேன்
மூர்ச்சையாகும் வரை !
மூர்ச்சையாகும் வரை !
பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!
நானணைத்தால்
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே
நான் விலகும்
போதினிலே
மீண்டும் ஒட்டிக்
கொள்ளுவதேன் ?
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே
நான் விலகும்
போதினிலே
மீண்டும் ஒட்டிக்
கொள்ளுவதேன் ?
வெட்கஆடை
நீயணிந்து வெப்பமாக
வந்து நின்றால்
வேலியோரம்
உள்ள ஆசை
வேங்கையாகப்
பாய்ந்திடுமே
நீயணிந்து வெப்பமாக
வந்து நின்றால்
வேலியோரம்
உள்ள ஆசை
வேங்கையாகப்
பாய்ந்திடுமே
களைந்திடுவேன்
இருஆடை
களையாத
கூந்தலாடை
கலைந்திடுமே
தினம் காலை
சொல்லிடுமே
நம் காதை
இருஆடை
களையாத
கூந்தலாடை
கலைந்திடுமே
தினம் காலை
சொல்லிடுமே
நம் காதை
இன்னும் என்ன
நாணமுகில்
பொழிந்திடுவாய்
காதல்மழை
இரைதேட
தொடங்கிடுவோம்
இருவருமே
களைக்கும்வரை...
நாணமுகில்
பொழிந்திடுவாய்
காதல்மழை
இரைதேட
தொடங்கிடுவோம்
இருவருமே
களைக்கும்வரை...
10 கருத்துகள்:
//நானணைத்தால்
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே//
:))))
அட இதுதான்
காமத்துப் பாலா?
அழகான கவிதை
:-)
நேசமுடன்..
-நித்தியா
நன்றி பாலு ! வந்து நின்று ரசித்துப் பின் ஊட்டமளித்ததற்கும் !
நன்றி நித்யா !
"அட இதுதான்
காமத்துப் பாலா?"
?? :))
நவீன் பிரகாஷ்,
மிக நுட்பமான கவிதை,
என்ன வடிவம் இது?
பல வகை கவிதை பற்றி அறிய
மிகுந்த விருப்பம் எனக்கு!
- கி.வி
http://siragugalinniram.blogspot.com/
வந்தமைக்கும் ஈந்தமைக்கும் நன்றி கி.வி
ஹைலி ரோமெண்டிக் கவிதை!!
'காதை' என்றால் கதையா??
எங்கிருந்து இப்படி அழகா புது புது வார்த்தை கிடைக்குது, ரொம்ப அருமையான வார்த்தை பிரயோகம்!
\பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!\\
வார்த்தைகள் கோர்த்த விதம்....
அற்புதம்!!
//Divya said...
ஹைலி ரோமெண்டிக் கவிதை!!
'காதை' என்றால் கதையா??
எங்கிருந்து இப்படி அழகா புது புது வார்த்தை கிடைக்குது, ரொம்ப அருமையான வார்த்தை பிரயோகம்!//
வாங்க திவ்யா...:)))
ஆம் காதை என்றால் கதை தான்..
மிக்க மகிழ்ச்சி இவ்வளவு பின்னோக்கி
வந்து படித்து பாராட்டியமைக்கு... :))
//Divya said...
\பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!\\
வார்த்தைகள் கோர்த்த விதம்....
அற்புதம்!! //
வாங்க திவ்யா...:)))
அப்படியா என்ன..?? ;)))
மிக்க நன்றி...அழகான வருகைக்கும்
ரசனையான தருகைக்கும்..
கருத்துரையிடுக