சில மாதங்கள்
நினைவுபடுத்துகின்றன
குளிர்தழுவும்
மார்கழியைப் போல்
என்னைத்தழுவி நிற்கும்
உன் நினைவுகள்
கோலத்தில் இட்ட
பூசணிப் பூப்போல
அதிகாலையிலேயே
நீயும்
கோலங்களுக்கிடையே
மற்றுமொரு
கோலமாக
பூத்து நிற்கிறாய்
பூக்களுக்கெல்லாம்
வேர்த்திருக்கின்றது
படிந்திருக்கும்
அதிகாலைப் பனி
கோலமிட்டுக்
களைத்திருக்கும் உன்
நெற்றியைப் போல
மெதுவாக விலகுகிறது
நீ வந்துவிட்டதைக்
கண்ட இருள்
ஆதவனைக் கண்டால்
வேறு என்ன செய்யும் ?
இருந்தும் உன்னைத்
தழுவிக்கிடக்கிறது
இருள்
பிறிய மனமில்லாமல்
கிடக்கும்
ஒரு காதலனைப் போல
இன்றும் மார்கழி
வருகிறது
கோலங்களுக்கிடையே
பூமலர்கிறது
பூக்களுக்கிடையே
தேடுகிறேன்
இருந்தும் என்ன
நீ மலர்ந்திராத கோலங்கள்
என்முன்
பனியில்லாத
மார்கழியாய்...
6 கருத்துகள்:
மலரும் நினைவுகள்
மனசுக்குள் மத்தாப்பாய்
தினம் ஒரு காதலாய்
வாழ்த்த தெரியவில்லை நண்பரே!
நீ மலர்ந்திராத கோலங்கள்
என்முன்
பனியில்லாத
மார்கழியாய்...
அழகான உண்மையான வரிகள் !
வருக குமார்,
நன்றி ! மற்றுமொரு காதலுக்கு !
வருக கணேஷ்,
நன்றி! வருகைக்கும் தருகைக்கும்!
//மெதுவாக விலகுகிறது
நீ வந்துவிட்டதைக்
கண்ட இருள்
ஆதவனைக் கண்டால்
வேறு என்ன செய்யும் ?
இருந்தும் உன்னைத்
தழுவிக்கிடக்கிறது
இருள்
பிறிய மனமில்லாமல்
கிடக்கும்
ஒரு காதலனைப் போல//
அபாரம். அழகான கற்பனை.. வருணனை..
விடிந்தும் விடியாத காலைப்ப்பொழுதின் கவின் காட்சி கண்முன்னே தெரிகிறது.
அன்புடன்
கீதா
நன்றி கீதா,
இனிது இனிது
கற்பனைகள்
இனிது
அதனினும் இனிது
அதனை
ரசிக்கும் வரிகள்
கருத்துரையிடுக