நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என
நமக்குள் ஆரம்பிக்கும்
ஒவ்வொரு சண்டையும்
வாயிலே ஆரம்பித்து
நம் இதழ்களிலே
முடிக்கப்படுகிறது
ஒவ்வொரு சண்டையும்
வாயிலே ஆரம்பித்து
நம் இதழ்களிலே
முடிக்கப்படுகிறது
இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?
சில நேரங்களில்
சில பொய்கள்
காதலுக்கு
நன்மை பயக்கும்
‘நீ கோபப்படும்போது
இன்னும் அழகாய் இருக்கிறாய்’
என்பதைப் போல
சில பொய்கள்
காதலுக்கு
நன்மை பயக்கும்
‘நீ கோபப்படும்போது
இன்னும் அழகாய் இருக்கிறாய்’
என்பதைப் போல
இதுக்கு முன்னாடி இப்படி
எத்தனை பொய் சொன்னாய்
என்னிடம் என நீ கோபமாக
கேட்கிறாய்
‘ நான் உன்னிடம் பொய்யே
சொன்னதில்லைடி இதுதான்
முதன் முறை ! ‘
நான் சொல்வது பொய் என
தெரிந்தும் ரசிக்கிறாய்
எத்தனை பொய் சொன்னாய்
என்னிடம் என நீ கோபமாக
கேட்கிறாய்
‘ நான் உன்னிடம் பொய்யே
சொன்னதில்லைடி இதுதான்
முதன் முறை ! ‘
நான் சொல்வது பொய் என
தெரிந்தும் ரசிக்கிறாய்
உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!
ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !
அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்
கொஞ்ச நேரம் படம்பார்க்க
விடேன் என கோபமாகக்
கூறுகிறாய்
இப்படிக் கூறியே
என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !
விடேன் என கோபமாகக்
கூறுகிறாய்
இப்படிக் கூறியே
என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !
செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்
38 கருத்துகள்:
என்னங்க ரொம்ப நாளாச்சு.
//‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!//
கலக்கல் வரிகள்....காதல் கொப்புளிக்குது.
//என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !//
அனுபவிச்சாதான் தெரியும் இந்த சுகமெல்லாம்....
வழக்கம் போலவே கலக்கி இருக்கறீங்க.
அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?
இந்தக் கவிதையிலிருக்கும் குறும்பு ரசிக்க வைத்தது :-)
இத்தனை நாள் விடுப்புக்கு, ஏதாவது விசேஷமான காரணமுண்டோ ;-) ?
இதர கவிஞர்கள் பயன்படுத்தும் அதிமேதாவித்தனமான வார்த்தைகள் இல்லாது, மிகஎளிய வார்த்தைகளுடன் கூடிய, உங்கள் கவிதைகள் அதற்கேற்ற படங்கள் மிக அருமை.
யப்பா
கண்ண கட்டுது
உட்டுடுங்க சாமிகளா இந்த காதலையும் பொண்ணையும்
very nice poems!!!!!
//Nandha said...
என்னங்க ரொம்ப நாளாச்சு.
//‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!//
கலக்கல் வரிகள்....காதல் கொப்புளிக்குது.//
வாங்க நந்தா :)))
மிக்க நன்றி உற்சாகம் கொப்பளிக்கும் வரிகளால் பாராட்டியதற்கு ! :))
//என்னைக் கெஞ்ச வைத்து
உன்னைக் கொஞ்ச வைப்பதில்
என்னதான்
ஆனந்தமோ !//
அனுபவிச்சாதான் தெரியும் இந்த சுகமெல்லாம்....
வழக்கம் போலவே கலக்கி இருக்கறீங்க. //
மிக்க நன்றி நந்தா !!
// நாமக்கல் சிபி said...
அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை! //
வாங்க சிபி :)) அட அட அட என்ன ஒரு அழகான விமர்சனம் :)))))
//கதிரவன் said...
இனி உன்னுடன் பேச
போவதில்லை என
சொல்லிவிட்டு பேசாமல்
இருக்கிறாய்
சரி நீ
உபயோகப்படுத்தாத உன்
உதடுகளை நான்
ஒரு முத்ததிற்கு
உபயோகப்படுத்திக்கொள்ளலாமா?
இந்தக் கவிதையிலிருக்கும் குறும்பு ரசிக்க வைத்தது :-)//
வாங்க கதிரவன் :)))
மிக்க நன்றி :)))
//இத்தனை நாள் விடுப்புக்கு, ஏதாவது விசேஷமான காரணமுண்டோ ;-) ? //
ஆஹா ஆரம்பிச்சுடாதீங்க கதிர் ! விசேசம் ஒன்றும் இல்லை நம்புங்க ! :)))
//வெயிலான் said...
இதர கவிஞர்கள் பயன்படுத்தும் அதிமேதாவித்தனமான வார்த்தைகள் இல்லாது, மிகஎளிய வார்த்தைகளுடன் கூடிய, உங்கள் கவிதைகள் அதற்கேற்ற படங்கள் மிக அருமை. //
வாருங்கள் வெயிலான் :)))
பெயரே அழகாக வைத்துஇருக்கிறீர்கள் !! ரசிப்புக்கு மிக்க நன்றி வெயிலான் :))))
//காதல் கவுஜ புடிக்காதவன் said...
யப்பா
கண்ண கட்டுது
உட்டுடுங்க சாமிகளா இந்த காதலையும் பொண்ணையும் //
வாங்க கவுஜ புடிக்காதவரே !!:))))
ஏன் இவ்வளவு வெறுப்பு ?? கவலைபடாதீங்க சரியா ??:))))))))
//subha said...
very nice poems!!!!! //
வாங்க சுபா :)))
Thank u very much !! :))
ஹையோ எப்படி இப்படியெல்லாம்??
சிந்து
wow, Superb !! keep it up !
adaa daa ..! mmm. nice.
hey ! Nice one !!!!!
"ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !"...
ம்ம்... எல்லாமே நன்றாகவே இருக்கின்றன. ரசித்துச் செல்கின்றேன்.
வாழ்த்துக்கள் நவீன்!
//Anonymous said...
ஹையோ எப்படி இப்படியெல்லாம்??
சிந்து //
வாங்க சிந்து ! :)))
அவை அப்படித்தான் :))))))))) மிக்க நன்றி !
//Anonymous said...
wow, Superb !! keep it up ! //
வாங்க அனானி மிக்க நன்றி ! :)
// நளாயினி said...
adaa daa ..! mmm. nice. //
வாருங்கள் நளாயினி :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !
//ராஜா said...
hey ! Nice one !!!!! //
வாருங்கள் ராஜா நன்றி ! :))
// சத்தியா said...
"ஏதேனும் உன்னிடம்
சண்டையிடாமல்
இப்பொழுதெல்லாம்
என்னால் இருக்க முடிவதில்லை
ஊடிக் கூடின்
கோடி ஆனந்தம் !"...
ம்ம்... எல்லாமே நன்றாகவே இருக்கின்றன. ரசித்துச் செல்கின்றேன்.
வாழ்த்துக்கள் நவீன்! //
வாங்க சத்தியா :)))
மிக்க மகிழ்ச்சி சத்தியா !மீண்டும் மீண்டும் வாருங்கள் ! :))
அன்புடன் கவிதைப் போட்டியில் நடுவர் ஆசிப் மீரானின் பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
:)
நவீன்.. உங்களுக்காக... http://xavi.wordpress.com/2007/06/20/me/
//அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்//
சூப்பர்'ங்க
all ur kavithais are simple and sweet.
//சேதுக்கரசி said...
அன்புடன் கவிதைப் போட்டியில் நடுவர் ஆசிப் மீரானின் பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி சேதுக்கரசி :))
//thurgah said...
:)//
:)) நன்றி துர்கா :))
//சேவியர் said...
நவீன்.. உங்களுக்காக... http://xavi.wordpress.com/2007/06/20/me///
:)) நன்றி சேவியர் :))
//PPattian said...
//அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்//
சூப்பர்'ங்க//
வாங்க பட்டையன் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைகும் :))
//It's me....NAAN.....Nanae thaan said...
all ur kavithais are simple and sweet.//
வாங்க ' நான்' :))
மிக்க நன்றி வருகைக்கும் ரசிப்புக்கும் :)))
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\
இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை????
\\செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்\\
சூப்பர்ப் வரிகள்,மிகவும் ரசித்தேன்!
அழகான 'கற்பனையில்' அருமையாக செதுக்கப்பட்ட கவிதை....பாராட்டுக்கள் நவீன்!
//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\
இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //
வாருங்கள் அனானி :)))
இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))
\\ நவீன் ப்ரகாஷ் said...
//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\
இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //
வாருங்கள் அனானி :)))
இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))\\
ஏனுங்க 'கவிதை' பேசுமா???
உங்க கற்பனையில மட்டும் பேசுங்களா??
//Divya said...
\\செல்லச் சண்டையும்
கள்ளப் பார்வையும்
குட்டிப் பொய்களும்
சிணுங்கள் முத்தங்களும்
காதல் கொண்டு
ஊடல் கொண்டவருக்கான
கொண்டாட்டங்கள்
எனப்படும்\\
சூப்பர்ப் வரிகள்,மிகவும் ரசித்தேன்!
அழகான 'கற்பனையில்' அருமையாக செதுக்கப்பட்ட கவிதை....பாராட்டுக்கள் நவீன்!//
வாங்க திவ்யா :)))
சூப்பர்ப் ரசனை :)))) அழகாக செதுக்கப்பட்ட பாராட்டுகள்.... மிக்க மகிழ்ச்சி.... :)))
//Anonymous said...
\\ நவீன் ப்ரகாஷ் said...
//Anonymous said...
\\நான் கவிதை
எழுதும்போதெல்லாம்
நமக்குள் சண்டை ஆரம்பித்து
விடுகிறாய்
இது எவளை நினைத்து எழுதிய
கவிதை என\\
இந்த கவிதை 'யாரை' நினைத்து எழுதிய கவிதை???? //
வாருங்கள் அனானி :)))
இந்தக்கவிதை ஒரு கற்பனையான பேசும் கவிதையை நினைத்து எழுதியதுங்க... போதுமா..? :))))\\
ஏனுங்க 'கவிதை' பேசுமா???
உங்க கற்பனையில மட்டும் பேசுங்களா??//
வாங்க அனானி :))
விட மாட்டீங்களா..?? :))))என்ன இப்படி கேட்டுடீங்க..? கவிதை பேசறதை பார்த்தில்லையா..? உங்க காதலியை பேசச்சொல்லி பாருங்கள்..அப்போ புரியும் :)))))
கருத்துரையிடுக