சனி, மே 27, 2006

காதல்சந்தம்



நான் உன்னிடம்
பேசப்போவதில்லை
என என்னிடம்
பேச ஆரம்பிக்கிறாய்


















ஏன் என்னை
காதலித்தாய் என
மீண்டும் மீண்டும் கேட்கிறாய்
ஏன் என்னை
பெற்றாய் என
தாயிடம் கேட்பதைப்போல



















நீ வராமல் காலம் தாழ்த்தியபோது
உருவான கோபப்புயல்
தூரத்தில் நீ வருவதைப்
பார்த்த நொடியே
வழுவிழந்து கரையைக்
கடந்தது.














அவளையே பார்த்துக்கோ
என்னை விட்டு விடு
என என்னிடம்
இன்றைய ஊடலை
ஆரம்பிக்கிறாய்






















உன் பிறந்த நாளுக்காக
நான் வாங்கித்தந்த
உடையை
ஏன் என்னிடம்
அணிந்து காட்டவில்லை
எனக்கேட்டால்
என்னைக்
கிள்ள ஆரம்பிக்கிறாய்
ததும்பி வழிகின்ற
உன் அழகான நாணத்துடன்














உன்னிடம் பேசும்
நேரத்தை விட
உன்னிடம் ஊடும்
நேரத்தில்தான்
உன்னை
அதிகம் நினைக்கிறேன்
என சொன்னதற்காக
என்னிடம்
சண்டையைத் தொடங்குகிறாய்







நான் பரிசளித்த
டாலர் கோர்த்த
செயினை
ஏன் அணியவில்லை
என நான் கோபமாக
கேட்டதற்கு
அணிந்திருக்கிறேன் என
நீ எடுத்துக்காட்டியபோது
பொறாமையாக
இருந்தது
டாலருக்கு மட்டும்
ஏன் இந்த கொடுப்பினை என்று

30 கருத்துகள்:

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

என்ன நவீன் எங்கையோ மாட்டிக்கிட்ட மாதிரி தெரியுது..?

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

நவீன்,

ஃபோட்டோவுல நீங்க ஒரு மார்க்கமா சிரிக்கும்போதே சந்தேகம் வந்துச்சு...
ஆள் விழுந்துட்டாரோன்னு..

ம்ம்...எழுந்திரிக்காதீங்க விழுந்தேக் கிடங்க :))

அன்புடன்,
அருள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//என்ன நவீன் எங்கையோ மாட்டிக்கிட்ட மாதிரி தெரியுது..?

வாழ்த்துக்கள் //

வாங்க நிலவு நண்பன் எங்கேயும் மாட்டிக்கொள்ளவில்லை. நம்புங்கள் :)

ப்ரியன் சொன்னது…

எங்கேயும் இல்லை நிலவு நண்பா காதலிடம்தான்!

நம்மையும் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார் அவர் தம் கவிதைகளிடம்!!

பெயரில்லா சொன்னது…

கவிதைகளை எழுதிவிட்டு படங்கள் தேர்வு செய்தீர்களா?.இல்லை
படங்களுக்காக கவிதை எழுதினீர்களா?.அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

நாமக்கல் சிபி சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது.
பொருத்தமான படங்களும் அருமை.

//என்ன நவீன் எங்கையோ மாட்டிக்கிட்ட மாதிரி தெரியுது..?
//

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஏதாவது .. வசந்தமா புயலா?
தென்றலா?..

சரி சரி. உங்கள் காட்டில் மழைதான்

:-):-)
இப்படியே.. எங்களுக்கும்
கோஜ் தான் :-)

நேசமுடன்..
-நித்தியா

சிங். செயகுமார். சொன்னது…

நடக்கட்டும் :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ஃபோட்டோவுல நீங்க ஒரு மார்க்கமா சிரிக்கும்போதே சந்தேகம் வந்துச்சு...
ஆள் விழுந்துட்டாரோன்னு..

ம்ம்...எழுந்திரிக்காதீங்க விழுந்தேக் கிடங்க :))

அன்புடன்,
அருள். //

வாங்க அருள்,
மார்க்கமா சிரிக்கிறேனா ??:))
என்னக்காவது காதல் கவிதை எழுதரவர் காதலித்திருக்கிறாரா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எங்கேயும் இல்லை நிலவு நண்பா காதலிடம்தான்!

நம்மையும் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார் அவர் தம் கவிதைகளிடம்!! //

வாங்க ப்ரியன் :)
நீங்கள்தான் சரியாகச் சொல்லியிருக்கிறீகள் :)) .நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கவிதைகளை எழுதிவிட்டு படங்கள் தேர்வு செய்தீர்களா?.இல்லை
படங்களுக்காக கவிதை எழுதினீர்களா?.அனைத்தும் அருமை.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா. //

கவிதைகளுக்கு பொருத்தமான படங்களையே தேர்வு செய்கிறேன்.படங்களௌக்குத்த்குந்த கவிதைகளை அல்ல ராஜா.தங்களின் கருத்துக்கள் என் கவிதைக்கு உரம் ! :)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

நன்றி சிபி
வருகைக்கும் தருகைக்கும்.

//எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் //

இல்லை சிபி. எப்பொழுதும் நான் காதல் கவிதைகள் தானே எழுதிக்கொண்டிருக்கிறேன் !! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஏதாவது .. வசந்தமா புயலா?
தென்றலா?..

சரி சரி. உங்கள் காட்டில் மழைதான்

:-):-)
இப்படியே.. எங்களுக்கும்
கோஜ் தான் :-)

நேசமுடன்..
-நித்தியா //

வாங்க நித்யா !
என் கவிதைக்காட்டில் மழைதான் சாரல்தான் இங்கு :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சிங். செயகுமார். said...
நடக்கட்டும் :) //

வாங்க செயக்குமார்:))
மிக்க நன்றி! தாங்கள் வருகை என் பாக்கியம் :)

பெயரில்லா சொன்னது…

உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவாக உள்ளன

'எனக்கொரு girlfriend வேணுமடா' என பாட வேண்டும் போலுள்ளது.

simply i love it

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Guru said...
உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவாக உள்ளன

'எனக்கொரு girlfriend வேணுமடா' என பாட வேண்டும் போலுள்ளது.

simply i love it //

வாங்க குரு ! :)

காதலியுங்கள் எப்பொழுதும் :) கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு நண்பி கிடைக்க வாழ்த்துக்கள் ! :)

கைப்புள்ள சொன்னது…

என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் இருக்குது.
:)-

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் இருக்குது.
:)-//

வாங்க கைபுள்ளே :)
குஜால்ஸா இருக்கா?? :))) நன்றி !

நெல்லைக் கிறுக்கன் சொன்னது…

வே உம்ம கவிதயும் அதுக்கு நீரு போட்ருக்க போட்டோவும் அருமயா இருக்குதய்யா. இதப் படிக்கும் போதும், பாக்கும் போதும் நெனப்பு சிறகடிச்சு என்கேயோ போகுது... தரமான பதிப்பு....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நெல்லைகிறுக்கன் said...
வே உம்ம கவிதயும் அதுக்கு நீரு போட்ருக்க போட்டோவும் அருமயா இருக்குதய்யா. இதப் படிக்கும் போதும், பாக்கும் போதும் நெனப்பு சிறகடிச்சு என்கேயோ போகுது... தரமான பதிப்பு.... //

வாங்க சேவியர்! :)
தங்கள் வரவினால் தன்யனானேன் :) நன்றீ !

பெயரில்லா சொன்னது…

என்ன நவின், குற்றால அருவி ல குளிக்கிற மாதிரி காதல் அருவி ல குளிச்சிருக்கீங்க போல இருக்குது. anyway எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.வழுக்கிடபோகுது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//புவா said...
என்ன நவின், குற்றால அருவி ல குளிக்கிற மாதிரி காதல் அருவி ல குளிச்சிருக்கீங்க போல இருக்குது. anyway எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.வழுக்கிடபோகுது. //

வாங்க புவா :)
:)) நன்றி ! வருகைக்கும் தருகைக்கும் :))

நெல்லைக் கிறுக்கன் சொன்னது…

அய்யா, என் பேரு சேவியர் இல்லய்யா. நான் திருநெல்வேலிக்காரன். உங்களுக்கு சேவியர்னு யாராவது தெரிஞ்சவுக நெல்லைல இருக்காவளா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

தவறுக்கு வருந்துகிறேன் நெல்லைகிறுக்கன் ! :)மன்னியுங்கள் !

ILA (a) இளா சொன்னது…

//என்னைக்
கிள்ள ஆரம்பிக்கிறாய்
ததும்பி வழிகின்ற
உன் அழகான நாணத்துடன்//
;)

Divya சொன்னது…

உங்கள் 'கவி' படைப்புகளில்...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதைகளில் ......இதுவும் ஒன்று;)))

Divya சொன்னது…

\\நீ வராமல் காலம் தாழ்த்தியபோது
உருவான கோபப்புயல்
தூரத்தில் நீ வருவதைப்
பார்த்த நொடியே
வழுவிழந்து கரையைக்
கடந்தது.\\


மிக அழகான வரிகள்......மனதில் பதிந்தும் விட்டன:)))

Divya சொன்னது…

\\உன்னிடம் பேசும்
நேரத்தை விட
உன்னிடம் ஊடும்
நேரத்தில்தான்
உன்னை
அதிகம் நினைக்கிறேன்
என சொன்னதற்காக
என்னிடம்
சண்டையைத் தொடங்குகிறாய்\\


ஊடும்....வார்த்தை புதுசா இருக்கு:))

ஊடலும், கூடலும்......காதலுக்கே உரிய அழகு , இல்லியா கவிஞரே?

Aravindhan சொன்னது…

அருமையான பதிவுகள் நண்பரே.தொடரட்டும் உங்கள் காதல்.

priyaa சொன்னது…

Thangal kavithai miga arumai. Pengalai varnippathil doctor pattam thangalucku thara vendum