செவ்வாய், ஆகஸ்ட் 29, 2006

கள்ளினும்...

Image Hosted by ImageShack.us



நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு


Image Hosted by ImageShack.us





நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?





Image Hosted by ImageShack.us





ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !



Image Hosted by ImageShack.us






முத்தமிட்டுவிட்டு
பார்ட்டிக்கு போய்
குடிச்சிட்டு வருவீங்களா ?
என ஒன்றுமே தெரியாதவள் போல்
கேட்கிறாய் !
ஏற்கனவே போதையேற்றிவிட்டு
என்ன இது கேள்வி ?



Image Hosted by ImageShack.us






ஏங்க இப்போ
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?







Image Hosted by ImageShack.us







இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..


54 கருத்துகள்:

கார்த்திக் பிரபு சொன்னது…

kalakal thlaiva..eppadi indha sarakku adikkum karuthai vaithu kavidhai eludhlaaam ena mudivedutheergal?

நாமக்கல் சிபி சொன்னது…

//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//

நாமக்கல் சிபி சொன்னது…

செம கிக்கான அவிதைதான் நவீன் பிரகாஷ்!

:)

Unknown சொன்னது…

யப்பா போதைத் தலைக்கு ஏறி போச்சுப்பா.... குறும்பான புதிய சிந்தனை...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
kalakal thlaiva..eppadi indha sarakku adikkum karuthai vaithu kavidhai eludhlaaam ena mudivedutheergal? //

வாங்க கார்த்திக் :)) ரெண்டுலயுமே ஒரு கிக் இருக்குதே அதனாலதான் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
செம கிக்கான கவிதைதான் நவீன் பிரகாஷ்!:) //

வாங்க சிபி :)) மிக்க நன்றி ! கிக்கில் சிக்கிகொண்டனவா வார்த்தைகள்?? ;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Dev said...
யப்பா போதைத் தலைக்கு ஏறி போச்சுப்பா.... குறும்பான புதிய சிந்தனை... //

வாங்க தேவ் :)) போதை பேதையாலா? ;)) மிக்க நன்றி !!

கைப்புள்ள சொன்னது…

//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//

இப்படி எல்லாம் எழுதறீங்களே? என்னை மாதிரியான ஆளுங்களைப் பாத்தா ஒங்களுக்குப் பாவமாவே இல்லியா?
:)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கைப்புள்ள said...
//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//

இப்படி எல்லாம் எழுதறீங்களே? என்னை மாதிரியான ஆளுங்களைப் பாத்தா ஒங்களுக்குப் பாவமாவே இல்லியா?//

வாங்க வாங்க கைப்புள்ளே :)))

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))

த.அகிலன் சொன்னது…

அட தூள்தான் தலை
அன்புடன்
த.அகிலன்

கைப்புள்ள சொன்னது…

பண்ணறதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டு இப்பிடியொரு கமெண்ட் வேற

//நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))//

கவுண்டமணி சொல்ற மாதிரி ஒரு பேச்சிலர் முன்னாடி இப்படி எல்லாம் வந்து கிக்கா கவிதையும் படமும் போட்டீங்கன்னா...என்னய்யா பண்ணுவான் அவன்? இல்ல என்ன பண்ணுவாங்கிறேன்?
:)

இராம்/Raam சொன்னது…

குருவே சிஷ்யனான எனக்கும் இம்மாதிரியான கவிதைகள் இயற்ற தயைகூர்ந்து அருள் புரியுங்களேன்.

ILA (a) இளா சொன்னது…

கள்ளிலே கலை வண்ணம் கண்டார்.
கண்ணதாசன் இருந்தால் இதை கண்டிப்பாக ரசித்து இருப்பார் என்னைப்போலவே

சத்தியா சொன்னது…

"ஏங்க இப்போ
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?"...

அப்பப்பா!... என்ன இது? இந்த முறை ஒரே போதையாக இருக்கே? ம்... சும்மா சொல்லக் கூடாது போதை எல்லாம் பேஸ்! பேஸ்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//த.அகிலன் said...
அட தூள்தான் தலை//

வாங்க அகிலன் :) மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கைப்புள்ள said...
பண்ணறதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டு இப்பிடியொரு கமெண்ட் வேற

//நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))//

கவுண்டமணி சொல்ற மாதிரி ஒரு பேச்சிலர் முன்னாடி இப்படி எல்லாம் வந்து கிக்கா கவிதையும் படமும் போட்டீங்கன்னா...என்னய்யா பண்ணுவான் அவன்? இல்ல என்ன பண்ணுவாங்கிறேன்?//

வாங்க கைபுள்ளே நானும் பேச்சிலர்தானே :)) எனக்குத்தெரியாதா ?? என்ன பன்ணனும்னு உங்களுக்குத்தெரியாதா என்ன ;)))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ராம் said...
குருவே சிஷ்யனான எனக்கும் இம்மாதிரியான கவிதைகள் இயற்ற தயைகூர்ந்து அருள் புரியுங்களேன்.//

வாங்க ராம் :)) என்ன செய்யவேண்டும் நான் ? கூறுங்கள் ப்ளீஸ் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA(a)இளா said...
கள்ளிலே கலை வண்ணம் கண்டார்.

:)))))))))))

//கண்ணதாசன் இருந்தால் இதை கண்டிப்பாக ரசித்து இருப்பார் என்னைப்போலவே //

மிக்க நன்றி இளா :)) உங்கள் ரசிப்பு என் பாக்கியம் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சத்தியா said...
அப்பப்பா!... என்ன இது? இந்த முறை ஒரே போதையாக இருக்கே? ம்... சும்மா சொல்லக் கூடாது போதை எல்லாம் பேஸ்! பேஸ்!//

வாங்க சத்தியா :))) காதலே ஒரு போதைதானே ?:)) அதனால்தான் இப்படி :) மிக்க நன்றி சத்யா :))

மா.கலை அரசன் சொன்னது…

கவிதை படிப்பவரை போதை கொள்ளத்தான் செய்கிறது.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// மா.கலை அரசன் said...
கவிதை படிப்பவரை போதை கொள்ளத்தான் செய்கிறது. //

வாருங்கள் கலைஅரசன் :)) போதை கொண்டமைக்கு மிக்க நன்றி ! ;))

Prawintulsi சொன்னது…

க்ரேட்..நவீன்...

காதலை ஒரு புதிய சாளரத்தின் மூலம் பார்க்க வைத்ததர்க்காக.புதிய கோணம்...புதிய சிந்தணை.எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்த சொற்கள்..அதனால் அது இளைஞர்களை ஈர்க்கும் என்பதில் ஐயம் இல்லை... ஆல் த பெஸ்ட் :)

பெயரில்லா சொன்னது…

நவீன் பேசாமல் குடிக்கவே போங்களேன் :)) ரொம்பவும்தான் தொல்லை படுத்துகிறீர்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// praveen said...
க்ரேட்..நவீன்...

காதலை ஒரு புதிய சாளரத்தின் மூலம் பார்க்க வைத்ததர்க்காக.புதிய கோணம்...புதிய சிந்தணை.//

வாருங்கள் ப்ரவீண் :)) தங்களின் பார்வைக்கு மிக்க நன்றி !!

//எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்த சொற்கள்..//

:))) மிக வித்தியாசமான வார்த்தையாடல் ரசித்தேன் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மகா said...
நவீன் பேசாமல் குடிக்கவே போங்களேன் :)) ரொம்பவும்தான் தொல்லை படுத்துகிறீர்கள். //

வாங்க மகா :)) (முழுபேரு என்னாங்க?) என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் ? என்னை குடிகாரனென்றே முடிவு செய்துவிட்டீர்களா?:(( கவிதையில் மட்டுமே போதை கொள்வேன் மகா :))))

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

//நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு//

ippadi ellaam ezhuthi engalukku bOthai EththureengaLE!

nalla kaathal....nalla bOthai...nalla kavithai...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நவீன் மன்னிச்சிக்கோங்க. உங்களைப் போலவே எழுத ஒரு முயற்சி. அவ்வளவே. உங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை.


அன்புடன்
சின்னதம்பி //

வாங்க சின்னதம்பி :))) மன்னிப்பெல்லாம் எதுக்குங்க ?? வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//சேரல் said...
ippadi ellaam ezhuthi engalukku bOthai EththureengaLE!

nalla kaathal....nalla bOthai...nalla kavithai...//

வாங்க சேரல் :)) போதை ஏதுகிறேனா நானா?? என்ன இது ? காதலே ஒரு போதைதானேன்னு சொல்லதான் .. ;))

Unknown சொன்னது…

/நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?
/

/ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !/


நவீன் நீங்கள் எப்போதும் போதையிலேயே இருக்க வாழ்த்துக்கள் ;))

பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அருட்பெருங்கோ said...

பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா? //

வாங்க அருள் :) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை போல் இருக்கிறதே !! :)) போதை பல வகை அதில் இது இரு வகை என கொள்ளலாமல்லவா ??:)) நன்றி அருள்!

வெற்றி சொன்னது…

நவீன்,
நல்ல கவிதை.

//இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..//

ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//வெற்றி said...
நவீன்,
நல்ல கவிதை.

//இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..//

ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.//

வாருங்கள் வெற்றி ! :)
தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !

கோழை சொன்னது…

பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் simply superb

பெயரில்லா சொன்னது…

நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ஆதவன் said...
பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் simply superb //

வாருங்கள் ஆதவன் :) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! யாருங்க எனக்கு ஆப்பு வைக்கப் போறா ?:))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//குசும்பு தேவி said...
நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது? //

வாங்க குசும்புதேவி :))

நான் நல்ல இந்தியக்குடிமகன் என சொல்ல வருகிறீர்கள் என தெரிகிறது ! மிக்க நன்றி தேவி ! உங்கள் விமர்சனங்களால்தான் இப்படியெல்லாம் யோசனை வருகிறது தேவி :))

கதிர் சொன்னது…

அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.

குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,

இதான் ஞாபகத்துக்கு வருது!

சூப்பர்!!1

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// தம்பி said...
அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.

குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,

இதான் ஞாபகத்துக்கு வருது!

சூப்பர்!!1 //

வாங்க தம்பி :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))

குடிமகன் தான் குடியைப் பற்றி எழுத வேண்டுமா என்ன ? பேதை நினைவே போதைதானே??;)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// சந்திர S சேகரன். said...
அடடா இத்தன நாள் இந்த பக்கம் வராம போயிட்டனே.. தல எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..அட்டகாசம்..//

வாங்க சந்திரசேகரன் :))

இதனைநாள் வராவிட்டால் என்ன இனிமேல் அடிக்கடி வாருங்கள் :)) மிக்க நன்றி :)

தாரிணி சொன்னது…

மீண்டும் உங்கள் கவிதைகளை விரைவில் இந்தப் பக்கத்தில் எதிர்பார்க்கலாமா?..

பெயரில்லா சொன்னது…

இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..

அட்டகாசம்..

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//காண்டீபன் said...
இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..

அட்டகாசம்.. //

வாருங்கள் காண்டீபன் மிக்க நன்றி !

U.P.Tharsan சொன்னது…

அடடா.......

பெயரில்லா சொன்னது…

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// U.P.Tharsan said...
அடடா....... //

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி தர்சன் :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கோப்பைக்குள் குடியிருப்பவன் said...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்! //

வாங்க குடியிருப்பவரே :))
கோப்பைக்குள் என்ன இருக்கிறது என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறத அல்லவா ?? ;)))

பெயரில்லா சொன்னது…

\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !\

அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !\

அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!//

வாங்க :)))
அட இப்படியெல்லாம்
என்னைய புகழ்ந்து ஏன்
என் வெட்கத்தை
வாங்கிக் கட்டிக்கறீஙக ?? :))))

Divya சொன்னது…

\நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?\

'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!

அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???

அழகான 'போதை'
உங்கள் கவிதை!!

Divya சொன்னது…

\\நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு\

ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!

ஏறிய போதை , எப்போ இறங்கும்????

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?\

'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!

அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???

அழகான 'போதை'
உங்கள் கவிதை!!//

வாங்க திவ்யா :)))
ஹஹ்ஹஹ அப்ப்டியெல்லாம் இல்லவே இல்லையே....:))))))) போதை தருகையும் தான்.... :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Divya said...
\\நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு\

ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!

ஏறிய போதை , எப்போ இறங்கும்????//

ஹஹஹஹ :)) திவ்யா இந்த போதை என்றும் இறங்காது ...::)))

மஹாராஜா சொன்னது…

romba super.. nalla irukku.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மஹாராஜா said...

romba super.. nalla irukku.//

வாங்க மஹாராஜா...:))
மிக்க நன்றி.... வருகையும்
தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :)))